நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா: அமெரிக்காவில் இந்திய பத்திரிகையாளர் யு.என்.ஐ. பிரஹம் கஞ்சிபோட்லா மரணம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய பத்திரிகையாளர் பிரஹம் கஞ்சிபோட்லா கொரோனா தொற்று நோய் தாக்கி பலியானார்.

அமெரிக்காவில் யு.என்.ஐ. நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர் பிரஹம் கஞ்சிபோட்லா (வயது 66). அமெரிக்காவில் 28 ஆண்டுகளாக வசித்து வந்தார் பிரஹம்.

Indian journalist dies of Coronaviurs in New York

நிதித்துறை தொடர்பான Merger Markets-ன் ஆசிரியராக 11 ஆண்டுகளாக அவர் பணிபுரிந்தார். பின்னர் News India-Times-க்கும் அவர் பணியாற்றினார். 1992-ல் அமெரிக்காவில் குடியேறிய அவர் ஏராளமான இந்திய ஊடகங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.

கடந்த மாதம் 23-ந் தேதி பிரஹம் கஞ்சிபோட்லாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து லாங் ஐலேண்ட் மருத்துவமனையில் அவர் மார்ச் 28-ல் அனுமதிக்கப்பட்டார்.

குட்நியூஸ்.. கொரோனா வைரஸ் 'வீக் பாயிண்ட்டை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. மருந்து, தடுப்பூசிக்கு சான்ஸ்குட்நியூஸ்.. கொரோனா வைரஸ் 'வீக் பாயிண்ட்டை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. மருந்து, தடுப்பூசிக்கு சான்ஸ்

இந்த நிலையில் திடீரென நேற்று பிரஹம் கஞ்சிபோட்லாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தமிழக பத்திரிகையாளருக்கு கொரோனா

இதனிடையே டெல்லியில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு அழைத்துவரப்பட்ட அந்த செய்தியாளர் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

English summary
Indian journalist Brahm Kanchibotla has died of Coronavirus in New York.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X