• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனா கிடக்கட்டும்.. ஈரானை கடுமையாக எச்சரிக்கை செய்து டிவீட் போட்ட டிரம்ப்.. என்னாச்சு திடீர்னு!

|

நியூயார்க்: "ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை ஈரான் தாக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.. அப்படி நடந்தால் ஈரான் அதற்கு கடுமையான விலையை கொடுக்க நேரிடும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே செம கடுப்பில் இருக்கோம்.. எங்களை சீண்டினால் இதுவரை இல்லாத அளவு வருத்தப்படுவீர்கள் என்ற ரேஞ்சுக்கு கொரோனா பீதிக்கு நடுவிலும் டிரம்ப் இந்த ட்வீட் பதிவிட்டுள்ளார்!

மனிதகுலமே ஒரு ஆபத்தான சூழலில் பயணித்து வருகிறது.. எந்த நாட்டில் எத்தனை பேர் பலி என்ற எண்ணிக்கை வயிற்றில் புளியை கரைத்து வருகிறது.

உலகமே இப்படி ஒரு கொள்ளை நோயை எதிர்த்து திணறி வருகிறது.. இந்த கொரோனா பீதியிலும் அமெரிக்காவும் - ஈரானும் வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல் எதையாவது சொல்லி வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.. ஏவுகணை சோதனையில் கிம் ஜோங்

அணுசக்தி

அணுசக்தி

2 நாட்டுக்காரர்களும் பெரிய அளவில் மோதல் இல்லாமல்தான் இருந்தனர்.. 2018-ல் இருந்துதான் பிரச்சனை ஆரம்பமானது.. முக்கியமான அணுசக்தி ஒப்பந்ததை டிரம்ப் கைவிட்டதுடன், ஈரான் மீதான பொருளாதார தடையை விதித்தார்.. அத்துடன் விடவில்லை.. அமெரிக்க படையை கொண்டு வந்து ஈராக்கில் குவித்தார்.. இப்படி ஒரு பதற்றத்தை ஆரம்பித்து வைத்ததே அமெரிக்காதான்! ஜனவரி மாதம் பாக்தாத்தில் ட்ரோன் தாக்குதலை நடத்தி ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொலை செய்ததால் உச்சக்கட்ட எதிர்ப்பை அமெரிக்கா சம்பாதித்தது!

சுலைமானி

சுலைமானி

தேவையில்லாமல் சுலைமானியை தொட்டதுதான் பிரச்சனை.. உங்களை உண்டு இல்லை என்று ஆக்காமல் விடமாட்டோம்.. இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அப்போதிருந்தே ஈரான் கொதித்து கொண்டிருக்கிறது.. இப்போது கொரோனா விவகாரம் தலைதூக்கிய பிறகும் இவர்களுக்குள் மோதல் வெடித்தபடியே உள்ளது. இத்தனைக்கும் அமெரிக்காவும், ஈரானும் கொரோனாவால் ஆயிரக்கணக்கான பேரை பறி கொடுத்துள்ளன.

டுவீட்

டுவீட்

இந்நிலையில் கொரோனா நடவடிக்கைக்கு மத்தியிலும் டிரம்ப் ஒரு ட்வீட் போட்டார்.. அதில், "ஈரானும், அவர்களுக்கு ஆதரவான படைகளும் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மற்றும் ஈராக்கின் சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன... அப்படி மட்டும் நடந்தால் ஈரான் அதற்கு மிக அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும்' என்றார்.

வார்னிங்

வார்னிங்

டிரம்ப் இப்படி ட்வீட் போட்டதுடன் நில்லாமல், செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ''நாங்க ஒன்னும் ஈரானுடன் விரோத போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை... ஆனால், அவங்க விரோதத்துடன் செயல்பட்டால், இதுவரை வருத்தப்படாத அளவுக்கு வருத்தப்பட வேண்டிய சூழல் வரும்" என்று வார்னிங் தொனியுடனே பேசினார்.

டிரம்ப்

டிரம்ப்

இப்போதைக்கு கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளானது அமெரிக்காதான்.. ஏராளமான உயிர்களை பறி கொடுத்ததும் அமெரிக்காதான்.. அதனால் வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படியாவது நாட்டு மக்களை காக்க வேண்டிய பொறுப்பு டிரம்புக்கு உள்ள நிலையில், ஈரானை இந்த நேரத்தில் வம்பிழுத்து எச்சரிப்பது தேவையா என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

உதவி

உதவி

அதேபோல, கொரோனாவைரஸ் தாக்குதலில் ஈரான் நிலைகுலைந்து போயுள்ளது.. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கூட தர முடியாமல், டெஸ்ட் செய்வதற்கு கருவிகள் தட்டுப்பாடுகளுடன் ஈரான் உள்ளது.. பரிசோதனை கருவிகள் இருந்தால் எங்களுக்கு தாங்களேன் என்று பிற நாடுகளிடம் ஈரான் உதவிகேட்டும் வருகிறது.

கேள்விகள்

கேள்விகள்

இப்படி ஒரு நிலையில் ஈரான் இருக்கும்போது, அமெரிக்க அதிபர் ஈரானை எச்சரித்துள்ளது உலக நாடுகளில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் ஒன்றாக சேர்ந்துதான் இந்த கொரோனாவை ஒழிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ள நிலையில், டிரம்ப் ஏன் இவ்வளவு "காண்டு" ஆகிறார்.. ஏன் இப்படி ஒரு விரோத போக்கை கடைப்பிடிக்கிறார் என்ற கேள்வி எழுந்தபடியே உள்ளது!!

 
 
 
English summary
coronavirus: donald trump warns iran will face heavy price
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X