நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரான் - அமெரிக்கா சண்டை எதிரொலி.. சரமாரியாக உயரும் கச்சா எண்ணெய் விலை.. உலக நாடுகள் அதிர்ச்சி!

ஈரான் அமெரிக்கா இடையே நடந்து வரும் சன்டை மற்றும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 3.5% அதிகரித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மூன்றாம் உலக போர் ஏற்படும் அளவுக்கு முக்கியமானவர் ... யார் இந்த சுலைமானி ?

    நியூயார்க்: ஈரான் அமெரிக்கா இடையே நடந்து வரும் சன்டை மற்றும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 3.5% அதிகரித்துள்ளது.

    ஈரான் அமெரிக்கா இடையே கடுமையான சண்டை நிகழ்ந்து வருகிறது. இன்றே அமெரிக்கா ஈரான் மீது போர் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஈரான் அமெரிக்கா மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    ராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

    குறிவைத்து தாக்கும் 12 ஏவுகணைகள்.. சீறிப்பாய்ந்தது.. அமெரிக்காவின் விமான தளம் காலி.. ஷாக் வீடியோ!குறிவைத்து தாக்கும் 12 ஏவுகணைகள்.. சீறிப்பாய்ந்தது.. அமெரிக்காவின் விமான தளம் காலி.. ஷாக் வீடியோ!

    கச்சா எண்ணெய்

    கச்சா எண்ணெய்

    இந்த சண்டை காரணமாக எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்தது.தொடர்ந்து தினமும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தது. போர் வந்தால் எண்ணெய் விலை உச்சத்தை தொடும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல்தான் நடந்து வருகிறது.

     விலை

    விலை

    ஈரான் அருகே இருக்கும் ஹோர்மூஸ் ஜலசந்திதான் உலகில் 40% எண்ணெய் வர்த்தகம் நடக்கும் இடம். இதற்கு அருகேதான் இந்த சண்டை நடந்து வருகிறது. இதனால் அங்கே தற்போது எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    தாக்குதல் என்ன

    தாக்குதல் என்ன

    இந்த தாக்குதல் காரணமாக அங்கு மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது கச்சா எண்ணெய் விலை சரமாரியாக உயர தொடங்கி உள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலை 3.5% உயர்ந்துள்ளது.

    ஒரு வாரம்

    ஒரு வாரம்

    ஆம் சில மணி நேரங்களில் இவ்வளவு வேகமாக கச்சா எண்ணெய் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை திடீரென 4.4 சதவீதம் அதிகரித்தது 69.16 டாலராக உயர்ந்தது. தற்போது மீண்டும் 4 சதவிகிதம் எண்ணெய் விலை கூடியுள்ளது.

    நிலை என்ன

    நிலை என்ன

    இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெட்ரோல் ரூ.78.69-க்கும், டீசல் ரூ.72.69-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது 80 ரூபாயை தொட வாய்ப்புள்ளது .

    English summary
    Iran USA fight: Oil prices spike more than 3.5% after Iran hits base used by US .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X