நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துரத்திய மோப்ப நாய்.. குகையில் கதறல்.. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்க தலைவன் பாக்தாதியின் இறுதி நிமிடங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    கதையை முடித்துவிட்டோம்....திக் திக் ஆபரேஷனை விளக்கிய டிரம்ப்.!

    நியூயார்க்: உலகை அச்சுறுத்தி வந்த மோசமான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பாக்தாதிக்கு அமெரிக்கா முடிவுரை எழுதி உள்ளது.

    70கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட பாக்தாதி எப்படி சுட்டுக்கொல்லப்பட்டான். அவனை கண்டுபிடித்து துரத்திய மோப்ப நாய், மற்றும் பாக்தாதி கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் என பாக்தாதியின் இறுதி நிமிடங்களை அமெரிக்க ஊடகங்கள் முழுமையாக விவரித்துள்ளன.

    இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் என்ற ஐஎஸ்ஐ தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக இருந்தவன் பாக்தாதி. இவன் 2013ம் ஆண்டு தன்னுடைய இயக்கத்தை ஐஎஸ்ஐஎஸ் என்று பெயர் மாற்றிக்கொண்டான்.

    வறுமையை எந்த புத்தகத்திலிருந்தும் கற்கவில்லை.. வறுமையிலேயே வாழ்ந்துள்ளேன்.. சவுதியில் மோடி பேச்சுவறுமையை எந்த புத்தகத்திலிருந்தும் கற்கவில்லை.. வறுமையிலேயே வாழ்ந்துள்ளேன்.. சவுதியில் மோடி பேச்சு

    கொடூர தண்டனைகள்

    கொடூர தண்டனைகள்

    பாக்தாதியின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் இதுவரை இல்லாத படுகொலை யுக்திகளை பின்பற்றி சிரியாவின் முக்கிய பகுதிகளையும், ஈராக்கின் சில பகுதிகளையும் கைப்பற்றினர். பாக்தாதியின் படையினர் பிணைக் கைதிகளை கழுத்தறுத்துக் கொன்றுவிடுதல், தவறு செய்பவர்களுக்கு மரண தண்டனை, பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை போன்றவற்றை செய்து அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது.

    களம் இறங்கிய அமெரிக்கா

    இந்நிலையில் அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை அழிக்க களம் இறங்கியது முதலே பாக்தாதியை கொல்வதற்காக அவனை தீவிரமாக தேடிவந்தது. இதையறிந்த பாக்தாதி ஓரிடத்தில் வசிக்காமல் இடத்தை மாற்றி மாற்றி வசித்து வந்தான். இப்படியே ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்த பாக்தாதியை பிடித்துக் கொடுத்தால் அல்லது துப்புக்கொடுத்தால் 70கோடி சன்மானம் அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து இருந்தது.

     கே-9 டாக்ஸ் பிரிவு

    கே-9 டாக்ஸ் பிரிவு

    இந்நிலையில் குர்தீஷ் படைகளுக்கு பாக்தாதி தங்கியிருக்கும் இடம் குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அவர்கள் அமெரிக்காவிடம் சொல்ல, அமெரிக்க ராணுவம் ஞாயிறு அன்று இரவில் கே-9 டாக்ஸ் பிரிவு வீரர்களையும் 8 ஹெலிகாப்டர்களையும் அனுப்பி வைத்தது. இந்த படையினர் குர்தீஷ் படையினருடன் இணைந்து வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள பரிஷா என்ற கிராமத்துக்கு சென்றனர். சிரியாவில் அப்போது சனிக்கிழமை மாலை 5 மணியாக இருந்தது.

    ஒரு மணி நேர பயணம்

    ஒரு மணி நேர பயணம்

    ரஷ்யா மற்றும் ஈரானின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த பகுதி மிகமிக ஆபத்தான பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியாகும். அங்குதான் பாக்தாதி பதுங்கி இருந்திருக்கிறான். சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடத்திற்கு பிறகு அமெரிக்க படை ஹெலிகாப்டருடன் பாக்தாதியின் இடத்தை அடைந்திருக்கிறது. முதலில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்கப் படை சில மணி துளிகளில் ஏராளமான ஐஎஸ் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது.

    விரட்டிய மோப்ப நாய்

    விரட்டிய மோப்ப நாய்

    அப்படியே பாக்தாதியின் கட்டடத்தின் நுழைவு வழியை நெருங்கிய அமெரிக்க படை வெடிகுண்டுகள் இருக்கலாம் என்பதால் கட்டிடத்தின் மற்றொரு சுவற்றின் மீது குண்டுகள் வீசி சுவற்றை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது. அங்கிருந்த தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றது. அப்போது அமெரிக்க படையுடன் மோப்ப நாயும் சென்றது. அமெரிக்க படைகள் வந்ததை அறிந்த பாக்தாதி பயத்தில் ஒடிச்சென்று குகையின் நிறைவுப்பகுதியில் போய் பதுங்கி கொண்டான். அவனை சரண் அடையுமாறு அமெரிக்க படை கேட்டது.ஆனால் பாக்தாதியோ சரண் அடையாமல் பதுங்கினான். அமெரிக்க படையின் மோப்ப நாய் பாக்தாதியை தேடி கண்டுபிடித்தது. இதை கண்டு கதறி அழுத அவன் உடையில் இருந்த குண்டை வெடிக்க செய்து தனது மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டான்

    சிதறிய உடல்கள்

    சிதறிய உடல்கள்

    இந்த ஆப்ரேசனின் போது 2 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சரண் அடைந்தனர். அத்துடன் 11 குழந்தைகள் வரை அமெரிக்காவின் கே-9 டாக்ஸ் படை மீட்டுள்ளது. இதனிடையே குர்தீஷ் படை உதவியுடன் பாக்தாதியின் வெடித்துச் சிதறிய உடல் பாகங்கள் மற்றும் அவன் அணிந்திருந்த உள்ளாடைகளை வைத்து பாக்தாதிதான் என்பதை டிஎன்ஏ பரிசோதனை செய்து அமெரிக்க படை உறுதிபடுத்தியது.

    டிரம்ப் அறிவிப்பு

    டிரம்ப் அறிவிப்பு

    அதன்பிறகு தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலகிற்கு அறிவித்தார். மேற்கண்ட தகவல்களையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் ஊடகங்களிடம் தெரிவித்தார். அத்துடன் பாக்தாதியை கொல்ல உதவிய நாயின் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இந்த ஆப்ரேசனில் ஒரு அமெரிக்க படை வீரருக்கு கூட காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. மோப்ப நாய்க்கு மட்டுமே சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    How the US caught up with Isis leader Abu Bakr al-Baghdadi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X