நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாருங்க.. உங்களால் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கே ஆபத்து.. மிஷன் சக்தியை கேள்விகளால் துளைக்கும் நாசா!

இந்தியா நடத்திய மிஷன் சக்தி ஆப்ரேஷனால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று நாசா கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியா நடத்திய மிஷன் சக்தி ஆப்ரேஷனால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று நாசா கூறியுள்ளது.

விண்வெளியில் குறைந்த உயரத்தில் சென்று கொண்டு இருக்கும் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஏ-சாட் விண்வெளி தொழில்நுட்பத்தை இந்தியா பெற்று இருக்கிறது என்று மோடி கடந்த வாரம் அறிவித்தார்.

இதன் மூலம் வானில் உளவு பார்க்கும் செயற்கைகோள்களை இந்தியா எளிதாக தாக்கி அழிக்க முடியும் என்று அவர் கூறினார். ஆனால் இந்தியாவின் இந்த மிஷன் சக்தி திட்டத்தை நாசா கடுமையாக எதிர்த்து இருக்கிறது.

நாசா என்ன சொன்னது

நாசா என்ன சொன்னது

இந்த ஆபரேஷன் காரணமாக விண்வெளியில் குப்பைகள் அதிகம் ஆகி இருப்பதாக நாசா கூறியுள்ளது. புதிதாக 400 குப்பைகள் இந்த சாட்டிலைட் தகர்க்கப்பட்டதால் உருவாகி உள்ளது. இது மிகப்பெரிய மோசமான ஆபரேஷன். இதை எப்படி இந்தியா நடத்தியது என்று நாசா விமர்சனம் செய்து இருக்கிறது.

என்னப்பா இது இப்படி குப்பையைக் கொட்டிட்டு போய்ட்டீங்க.. மிஷன் சக்தியால் எரிச்சலான நாசா!என்னப்பா இது இப்படி குப்பையைக் கொட்டிட்டு போய்ட்டீங்க.. மிஷன் சக்தியால் எரிச்சலான நாசா!

எப்படி

எப்படி

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 10க்கும் அதிகமான நாடுகள் மூலம் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் விண்வெளி வீரர்கள் சென்று ஆராய்ச்சி செய்வது வழக்கம்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

பல நாட்டு விண்வெளி வீரர்கள் அங்கு செல்வதும் சில நாட்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு பின் மீண்டும் திரும்பி வருவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு தற்போது இந்த மிஷன் சக்தி ஆபரேஷனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக நாசா தெரிவித்து இருக்கிறது.

எல்லாமும் குப்பை

எல்லாமும் குப்பை

மிஷன் சக்தியால் உருவான புதிய குப்பைகள் தற்போது இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு அருகில்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த குப்பைகள் எப்போது வேண்டுமானாலும் ஸ்பேஸ் ஸ்டேஷன் மீது மோதும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் அது உலக நாடுகளுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பெரிய ஆபத்து

பெரிய ஆபத்து

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் சீனா இதே போல நடத்திய ஆபரேஷனால் நிறைய குப்பைகள் சேர்ந்தது. தற்போது மிஷன் சக்தியால் எப்போது வேண்டுமானாலும் ஸ்பேஸ் ஸ்டேஷன் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தாக்குதலுக்கான வாய்ப்பு 44% ஆக உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.

English summary
ISS may affect due to India's operation says NASA on Mission Shakthi in very furious tone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X