நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னப்பா இது இப்படி குப்பையைக் கொட்டிட்டு போய்ட்டீங்க.. மிஷன் சக்தியால் எரிச்சலான நாசா!

இந்தியா நடத்திய மிஷன் சக்தி ஆபரேஷன் காரணமாக விண்வெளி ஆராய்ச்சியில் நிறைய பாதிப்புகள் ஏற்படும், நிறைய பிரச்சனைகள் உருவாகும் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை நாசா முன்வைத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Mission Shakthi: இந்தியாவின் மிஷன் ஷக்தி திட்டத்தை விமர்சித்த நாசா- வீடியோ

    நியூயார்க்: இந்தியா நடத்திய மிஷன் சக்தி ஆபரேஷன் காரணமாக விண்வெளி ஆராய்ச்சியில் நிறைய பாதிப்புகள் ஏற்படும், நிறைய பிரச்சனைகள் உருவாகும் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை நாசா அடுக்கி இருக்கிறது. இந்திய அரசை நாசா கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறது.

    இந்தியாவின் மிஷன் சக்தி விண்வெளி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிய நாட்டின் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் சக்தியை இந்தியா பெற்றுள்ளது. பல வருட உழைப்பிற்கு பின் இந்தியா இந்த விண்வெளி வல்லமையை பெற்றுள்ளது.

    இதை பிரதமர் மோடி தானாக முன்வந்து தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். ஆனால் இந்த திட்டத்தை நாசா மிக கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறது.

    என்ன சொன்னது

    என்ன சொன்னது

    மோசம்.. மிக பயங்கரம்.. தவறான மிஷன், இதுதான் இந்தியாவின் மிஷன் சக்தி குறித்து நாசா தெரிவித்த கருத்து. இப்படி ஒரு செயலை எப்படி செய்ய முடிந்தது, இதனால் என்ன பாதிப்புகள் வரும் என்று தெரியாதா, இதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாசா தெரிவித்து இருக்கிறது. இதற்கான காரணங்களையும் நாசா அடுக்கி உள்ளது.

    பாருங்க.. உங்களால் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கே ஆபத்து.. மிஷன் சக்தியை கேள்விகளால் துளைக்கும் நாசா! பாருங்க.. உங்களால் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கே ஆபத்து.. மிஷன் சக்தியை கேள்விகளால் துளைக்கும் நாசா!

    நிறைய குப்பை

    நிறைய குப்பை

    இந்தியாவின் இந்த மிஷன் சக்தி காரணமாக, விண்வெளியில் புதிதாக 400 விண்வெளி குப்பை உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த குப்பைகள் விண்வெளி முழுக்க சுற்றிக்கொண்டு இருக்கிறது. இவற்றில் சில பெரிய அளவில் இருப்பதாகவும், சில சிறிய அளவில் வேகமாக சுற்றுவதாகவும் நாசா அச்சம் தெரிவித்துள்ளது.

    அருகில்

    அருகில்

    இதில் நாசா அதிகம் எச்சரித்து இருப்பது, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் குறித்துதான். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அருகில் இந்த குப்பைகள் பறக்கிறது. அந்த குப்பைகள் இந்த மையத்தை தாக்க வாய்ப்புள்ளது. அதேபோல் பல செயற்கைகோள்களை இந்த குப்பைகள் தாக்கி அழிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக நாசா எச்சரித்து இருக்கிறது.

    பெரிய அளவில் பாதிக்கும்

    பெரிய அளவில் பாதிக்கும்

    இதனால் எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும் என்றும் நாசா கூறியுள்ளது. விண்வெளிக்கு எதிர்காலத்தில் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இது பெரிய இடையூறாக இருக்கும் என்று நாசா கூறி இருக்கிறது. விண்வெளியில் செய்யும் பயணங்களுக்கு இந்த பெரிய குப்பைகள் தடங்கலாக இருக்கும் என்று நாசா கூறியுள்ளது.

    நாசா ஆராயும்

    நாசா ஆராயும்

    தற்போது நாசா இந்த மிஷன் சக்தி குறித்து ஆராய்ச்சி செய்ய உள்ளது. இதனால் எதிர்காலத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆராய உள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு நாசா மட்டுமில்லாமல் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே பிரச்சனை

    ஏற்கனவே பிரச்சனை

    ஏற்கனவே விண்வெளி குப்பைகள் பிரச்சனை பெரிய ஒன்றாக மாறி வருகிறது. விண்வெளியில் இருக்கும் இது போன்ற குப்பைகளை எப்படி அகற்றலாம் என்று பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்தியா இப்படி ஒரு விஷயத்தை செய்து இருப்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    English summary
    It is terrible, It’s unacceptable says NASA on DRDO's Mission Shakthi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X