நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடா...ஜனவரி 24 ல் இத்தனை கொண்டாட்டங்களா ?

Google Oneindia Tamil News

நியூயார்க் : ஜனவரி 24 இந்தியாவில் பெண் குழந்தைகள் தினமாக மட்டுமின்றி, சர்வதேச கல்வி தினமாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் இந்த ஆண்டு சர்வதேச கல்வி தினத்தை, சிறப்பானதாக கொண்டாட யுனெஸ்கோ திட்டமிட்டுள்ளது.

கல்வி கண் போன்றது ; எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்...என்ற வரிகளை உலகம் அறிய செய்ய வேண்டும் என்பதற்காகவும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் சர்வதேச கல்வி தினத்தை உருவாக்கிய யுனெஸ்கோ, ஆண்டுதோறும் ஒரு மைய கருத்தை வைத்து ஜனவரி 24 ஐ கொண்டாடி வருகிறது.

 January 24 is marked as ‘Education Day’ globally

யுனெஸ்கோ புள்ளிவிபர அறிக்கையின் படி, உலக அளவில் 258 மில்லியன் குழந்தைகள் பள்ளி கல்வியை நிறுத்தி உள்ளனர். 617 மில்லியன் குழந்தைகளுக்கு அடிப்படை கணிதமோ, வாசிக்கும் திறனோ இல்லாமல் உள்ளனர்.

அமைதி மற்றும் வளர்ச்சி சார்ந்த கல்வியை உருவாக்க வேண்டும் என்பதே யுனெஸ்கோவின் நோக்கம். 2018 ம் ஆண்டு டிசம்பர் 3, நைஜீரியா மற்றும் 58 நாடுகளை உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி, அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா., நிறைவேற்றியது.

இந்த ஆண்டு சர்வதேச கல்வி தினம், கோவிட் 19 ன் காரணமாக பாதிக்கப்பட்ட இன்றைய தலைமுறையினரின் கல்வியை மீட்டெடுத்து, புத்துயிர் தர வேண்டும் என்ற மைய கருத்துடன் கொண்டாட யுனெஸ்கோ திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் அனைவரும் ஒன்றுபட்டு கல்வியின் ஆற்றலை மீட்டெடுத்து, உலகறிய செய்ய வேண்டும் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விழா பாரீஸ் மற்றும் நியூயார்க்கில் உள்ள யுனெஸ்கோ தலைமையகங்களில் ஜனவரி 25 அன்று கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பாக கட்டுரை போட்டி ஒன்றையும் நடத்த ஐநா திட்டமிட்டுள்ளது.

English summary
January 24 is marked as ‘Education Day’ globally to celebrate the role of education for peace and development.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X