நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்.. போட்டியிலிருந்து விலகினார் சென்னை பெண் கமலா ஹாரிஸ்.. ஷாக்கிங் காரணம்!

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து தமிழக வம்சாவளியை சேர்ந்த பெண்மணி கமலா ஹாரிஸ் விலகி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து தமிழக வம்சாவளியை சேர்ந்த பெண்மணி கமலா ஹாரிஸ் விலகி இருக்கிறார். பிரச்சாரம் செய்ய போதிய பணம் இல்லை என்று கூறி அவர் பதவி விலகி உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் 2020 இறுதியில் முடிகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல்கள் அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ரிபப்ளிக் கட்சி மற்றும் டெமாக்ரடிக் கட்சி சார்பாக இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

ரிபப்ளிக் கட்சி சார்பாக டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் ரிபப்ளிக் கட்சி சார்பாக மூன்று முக்கியமான நபர்கள் தேர்தலில் போட்டியிட தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்கள்.

மூன்று பேர்

மூன்று பேர்

அதன்படி முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், அமெரிக்க - ஆப்ரிக்க - இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கமலா ஹாரிஸ், இந்திய - அமெரிக்க வம்சாவளி பெண் துளசி கப்பார்ட் ஆகியோர் டெமாக்ரடிக் கட்சி சார்பாக போட்டியிட பிளான் செய்தனர். இவர்களில் ஒருவர்தான் கடைசியில் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

பொதுவாக மக்கள் ஆதரவு, 50 மாநிலங்களில் அங்கு மக்கள் எப்படி அந்த வேட்பாளரை அணுகுகிறார்கள் என்பதை பொறுத்து இது முடிவு செய்யப்படும். அதேபோல் தேர்தலில் செலவு செய்ய அந்த வேட்பாளரால் எவ்வளவு பணம் செலுத்த முடிகிறது. எவ்வளவு நிதி திரட்ட முடிகிறது என்பதும் இதில் முக்கியத்துவம் பெறும்.

தொடக்கம் ஓகே

தொடக்கம் ஓகே

இதில் தொடக்கத்தில் கமலா ஹாரிஸ் நல்ல மக்கள் ஆதரவுடன் முன்னிலையில் இருந்தார். ஆனால் போக போக அவரின் ஆதரவு குறைந்து, தற்போது அவருக்கு மக்கள் ஆதரவு 3% மட்டுமே இருக்கிறது. டெமாக்ரடிக் கட்சியில் ஜோ பிடனுக்கு அதிக ஆதரவு உள்ளது. அவருக்கு அடுத்து துளசி கப்பார்டுக்கு அதிக ஆதரவு உள்ளது.

விலகினார்

விலகினார்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து தமிழக வம்சாவளியை சேர்ந்த பெண்மணி கமலா ஹாரிஸ் விலகி இருக்கிறார். பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறேன். ஆனால் நான் என்ன குறிக்கோளுக்காக இயங்கினேனோ அதற்காக தொடர்ந்து செயல்படுவேன். எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி, என்று குறிப்பிட்டுள்ளார்.

என்ன காரணம்

பிரச்சாரம் செய்ய போதிய பணம் இல்லை என்று கூறி அவர் பதவி விலகி உள்ளார். அதில், நான் அனைத்து விதமாகவும் யோசித்து பார்த்தேன். கடந்த சில தினங்களாக எனக்கு தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை. போதுமான பணம் இல்லாமல் நிறைய பிரச்சனை வந்தது. நான் கோடீஸ்வரி கிடையாது. என்னால் அதிகம் செலவு செய்ய முடியாது.

முடியவில்லை

முடியவில்லை

எனக்கு யாரும் நிதி கொடுக்கவில்லை. அதனால் நான் இந்த தேர்தலில் இருந்து விலகிக் கொள்கிறேன். உங்களுக்கு எல்லாம் என்னுடைய பெரிய நன்றி. உங்கள் ஆதரவு எனக்கு பெரிய அளவில் சக்தியை கொடுத்தது, என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

யார் இவர்

யார் இவர்

கமலா ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் தனது பால்ய நாட்களை கழித்து இருக்கிறார். இவர் தாய் தமிழ் பெண். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இவர்கள் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்கள். அடிக்கடி இவர் தமிழகம் வரும் வழக்கத்தை கொண்டுள்ளார்.

என்ன பணிகள்

என்ன பணிகள்

இவர் அமெரிக்காவில் துணை அட்டர்னி ஜென்ரல், அட்டர்னி ஜென்ரல் பதவிகளில் வகித்து இருக்கிறார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் 1990ல் இருந்தே தீவிர அரசியலில் இருக்கிறார். கடந்த 2016 செனட்டர் தேர்தலில் வெற்றிபெற்றார். கலிபோர்னியாவின் செனட்டராக தற்போது இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamala Harris drops her out of 2020 US Presidential Race: Called off ger campaign due to shortage of fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X