நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சென்னை பெண்.. டிரம்ப்பிற்கு எதிராக களமிறங்கும் தமிழ் வாரிசு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் 2020 இறுதியில் முடிகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல்கள் அதே வருடம் நடக்கும்.

கடந்த வாரம்தான் அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல்கள் நடந்து முடிந்தது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

[இன்று விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29 செயற்கைக்கோள்.. புதிய சாதனை படைக்கும் இஸ்ரோ!]

போட்டி

போட்டி

இதையடுத்து 2020 அதிபர் தேர்தலிலும் இதேபோல் ஜனநாயக கட்சி வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது. அந்த கட்சியின் சார்பாக கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதே சமயம் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பாக டிரம்பிற்கு பதில் வேறு ஒருவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

 யார் இவர்

யார் இவர்

கமலா ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் தனது பால்ய நாட்களை கழித்து இருக்கிறார். இவர் தாய் தமிழ் பெண். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இவர்கள் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்கள். அடிக்கடி இவர் தமிழக வரும் வழக்கத்தை கொண்டுள்ளார்.

 என்ன பணியில் உள்ளார்

என்ன பணியில் உள்ளார்

இவர் அமெரிக்காவில் துணை அட்டர்னி ஜென்ரல், அட்டர்னி ஜென்ரல் பதவிகளில் வகித்து இருக்கிறார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் 1990ல் இருந்தே தீவிர அரசியலில் இருக்கிறார். கடந்த 2016 செனட்டர் தேர்தலில் வெற்றிபெற்றார். கலிபோர்னியாவின் செனட்டராக தற்போது இவர் இருக்கிறார்.

 நிறைய பணிகள் செய்துள்ளார்

நிறைய பணிகள் செய்துள்ளார்

அமெரிக்காவில் அதிகம் விரும்பப்படும் செனட்டர்களில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார். இவர் நிற வெறிக்கு எதிராக நிறை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதேபோல் இந்தியா அமெரிக்கா உறவிலும் முக்கிய மாற்றங்களை இவர் முன்னெடுப்பார் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினர் தொடர்பான சட்டங்களிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வருவார் என்று கூறப்படுகிறது.

 இப்போதே பணிகளை தொடங்கிவிட்டார்

இப்போதே பணிகளை தொடங்கிவிட்டார்

இவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார். இதற்காக இப்போதே ஃபண்ட் வசூல் செய்யும் பணிகளில் இறங்கி இருக்கிறார். விரைவில் இவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வ் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருக்கிறது.

 நம்பர் 1 இடம்

நம்பர் 1 இடம்

ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஏற்ற வேட்பாளர்களில் இவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார். அந்த கட்சியில் இவருக்கு 70 சதவிகித உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வாய்ப்புள்ளது. அதே கட்சியில் உள்ள இன்னொரு பெண்ணான துளசி கப்பார்ட் (இந்து பெண்.. இந்தியர் அல்ல) அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள நபர்களில் 4வது இடத்தில் இருக்கிறார்.

 என்ன ஆகும்

என்ன ஆகும்

ஒருவேளை அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாகும்பட்சத்தில் பின்வரும் அற்புதங்கள் நிகழ்வும்.

1. அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்.

2. அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் அதிபர். (தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்)

3. அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி அதிபர், ஆகிய சிறப்புகளை பெறுவார் என்று கூறப்படுகிறது.

English summary
Kamala Harris, Tamil origin US Lawmaker, Could Run For President In 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X