நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்!

ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து நேற்று பிரதமர் மோடி அதிபர் டிரம்ப்பிடம் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi - Trump : காஷ்மீர் விவகாரம்.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்- வீடியோ

    நியூயார்க்: ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து நேற்று பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

    ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்பாகவே அந்த பிரச்சனை மூன்று வாரங்களுக்கு முன்பு சூடு பிடித்தது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப். காஷ்மீர் குறித்து அவர் சொன்ன கருத்து ஒன்று பெரிய வைரலானது.

    சரியாக மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துக் கொண்டனர். பல்வேறு பிரச்சனைகள் குறித்து இரண்டு நாடுகளும் சேர்ந்து ஆலோசனை நடத்தியது.

    என்ன உதவி

    என்ன உதவி

    இந்த நிலையில் அப்போது காஷ்மீர் குறித்து பேசிய டிரம்ப், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பிரதமர் மோடி இந்த பிரச்சனையை பேசி தீர்க்க தயாராக இருக்கிறார். என்னிடம் கூட அவர் இதற்காக உதவி கேட்டார். காஷ்மீர் பிரச்சனை தீர்க்க உதவும்படி மோடி என்னிடம் கேட்டார். நான் கண்டிப்பாக உதவ தயார், என்று டிரம்ப் கூறினார்.

    தவறு

    தவறு

    அமெரிக்காவின் இந்த விருப்பத்தை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. ஆனால் டிரம்ப்பின் இந்த கருத்தை இந்திய அரசு தவறு என்று கூறியது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் விவகாரத்தில் மோடி யாருடைய உதவியையும் கேட்கவில்லை. இந்திய அரசு இதை பாகிஸ்தானுடன் தனியாக பேசி தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறது. இதில் அமெரிக்கா தலையிட கூடாது என்று கூறியது.

    இம்ரான் என்ன

    இம்ரான் என்ன

    இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க அதிபரிடம் பேசினார். காஷ்மீரில் இந்தியா தவறான முடிவுகளை எடுக்கிறது என்று அவர் கூறினார். அதேபோல் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க அமெரிக்கா உதவ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    மோடி என்ன

    மோடி என்ன

    இதையடுத்து நேற்று இரவே பிரதமர் மோடியும் டிரம்பிடம் போன் மூலம் பேசினார். அதில், ஆசிய பிராந்தியத்தில் சில தலைவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறார்கள், இந்தியாவிற்கு மிக கடுமையாக வன்முறையை தூண்டி விட பார்க்கிறார்கள் என்று பாகிஸ்தானுக்கு எதிராக மோடி டிரம்ப்பிடம் பேசினார்.

     என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இந்த நிலையில் இரண்டு நாடுகளும் காஷ்மீர் விஷயத்தை கவனமாக கையாள வேண்டும். இரண்டு நாடுகளும் தவறான முடிவு எதையும் எடுக்க கூடாது. முக்கியமாக ராணுவ நடவடிக்கை, தாக்குதல்கள் போன்ற முடிவை எடுக்கவே கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாட்டு தலைவர்களிடமும் பேசிய பின் குறிப்பிட்டார்.

     ஏன் இப்போது

    ஏன் இப்போது

    இந்திய பிரதமர் மோடி இதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையில் மீண்டும் டிரம்பை உள்ளே கொண்டு வந்துவிட்டார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறி உள்ளனர். டிரம்பிடம் உதவி கேட்கவில்லை என்று மத்திய அரசு கூறியது. ஆனால் தற்போது அதே டிரம்ப்பிடம் மோடி உதவி கேட்டு உள்ளார்.பாகிஸ்தான் குறித்து அமெரிக்காவிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    இதனால் இனிமேல் காஷ்மீர் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனையாகவோ, அல்லது இரண்டு நாட்டு பிரச்சனையாகவோ இருக்காது. தற்போது காஷ்மீருக்குள் அமெரிக்கா தனது கையை நுழைத்துவிட்டது. அதற்கு இந்தியாவும் வழிவிட்டுவிட்டது. இதனால் இனி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Kashmir Issue may become uncontrollable after PM Modi's phone call to Donald Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X