நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்காவில் மோடிக்கு காஷ்மீர் பண்டிட்டுக்கள் உற்சாக வரவேற்பு.. இன்று ஹவுடி மோடியில் பங்கேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    PM modi meeting with CEOs of top energy companies | மோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு

    நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ஜம்மு காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாகத்துடனும் நெகிழ்ச்சியுடனும் வரவேற்பளித்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் இன்று ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் டொனால்ல்டு டிரம்ப் இணைந்து பங்கேற்கின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு பொதுக்கூட்டம், ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டம், ஹவுடி மோடி நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்வுகளில் மோடி பங்கேற்கிறார்.

    Kashmiri Pandits meet PM Modi

    அமெரிக்காவின் ஹுஸ்டன் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு ஜம்மு காஷ்மீர் பண்டிட்டுகள் உற்சாகத்துடனும் நெகிழ்ச்சியுடனும் வரவேற்பு அளித்தனர். ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நெகிழ்வின் உச்சகட்டமாக பிரதமர் மோடியின் கையில் முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

    இன்று ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்பும் பங்கேற்கிறார்,

    இந்த தருணத்தை தாம் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்கா செல்வதற்கு முன்னர் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    பல லட்சங்கள் கைமாறிய நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வசமாக சிக்கும் அதிகாரிகள்?பல லட்சங்கள் கைமாறிய நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்.. வசமாக சிக்கும் அதிகாரிகள்?

    English summary
    A delegation of Kashmiri Pandits met and interacts with Prime Minister Narendra Modi in US.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X