நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்ப தான் நைட் டூட்டி முடிஞ்சது.. வெளியே வந்த நர்ஸ்.. இழுத்து கொண்டு போய்.. அலறி போன அமெரிக்கா!

அமெரிக்காவில் இந்திய நர்ஸ் குத்தி கொலை செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அப்பதான் நைட் டியூட்டி முடிச்சிட்டு, வெளியே வந்தார் நர்ஸ்.. அவரை தடுத்து, ஒதுக்குப்புறமாக இழுத்து கொண்டு போய் இளைஞர் செய்த காரியத்தால் அமெரிக்காவே அலறி கிடக்கிறது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மெரின் ஜாய்.. 26 வயசாகிறது.. இவர் ஒரு நர்ஸ்.. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

 kerala nurse stabbed and murdered by her friend in us

இந்நிலையில், வழக்கம்போல் நைட் டியூட்டி முடித்துவிட்டு, ஆஸ்பத்திரியில் இருந்து மெரின் வெளியே வந்தார்.. அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் மெரினை கத்தியால் குத்திவிட்டார்.. இதில் நிலைகுலைந்து விழுந்தவர் உயிருக்கு துடிதுடித்து போராடினார்.. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது.

இதுகுறித்து அமெரிக்க போலீசார் விசாரணையை துவங்கினர்.. நர்ஸை கத்தியால் குத்தி கொன்றது யார் என்று அங்கிருந்த சிசிடிவி கேமிராவிலும் ஆராய்ந்தனர்.. அப்போதுதான் கொலை செய்தது மெரினினுடன் வாழ்ந்த மேத்யூ என்பவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதை பற்றி போலீசார் சொல்லும்போது, 'நைட் டியூட்டியை முடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருக்கும்போதுதான், மேத்யூ அவரை பிடித்து ஒதுக்குப்புறமாய் இழுத்து பல முறை கத்தியால் குத்தி உள்ளார்.. எவ்வளோ காப்பாற்ற முயன்றும், மெரின் பரிதாபமாக உயிரிழந்தார்." என்றனர்.

மிச்சிகனில் உள்ள விக்சன் நகரைச் சேர்ந்தவர் மேத்யூ.. கடந்த 2016-ம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் நட்பில் அதாவது லிவிங் டூகெதரில் இருந்ததாக கூறப்படுகிறது. 2 வயசில் ஒரு குழந்தை உள்ளது.. ஆனாலும் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்படவும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.. குழந்தை மெரினிடம்தான் இருந்திருக்கிறது.

எனக்கு 24 டவுட் இருக்கு.. சுஷாந்த் சிங் நிச்சயம் தற்கொலை செய்யலை.. கொலைதான்.. அடித்துக் கூறும் சாமி எனக்கு 24 டவுட் இருக்கு.. சுஷாந்த் சிங் நிச்சயம் தற்கொலை செய்யலை.. கொலைதான்.. அடித்துக் கூறும் சாமி

குழந்தையை பார்க்க மெரின் இவரை அனுமதிக்கவில்லையாம்.. அதுதான் மேத்யூவுக்கு ஆத்திரம் வந்துள்ளது.. அதனால் கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். மெரினை கொன்றுவிட்டு, ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்துள்ளார்.. போலீசார் அங்கு விரைந்து சென்றபோது, கை அறுக்கப்பட்ட நிலையில் தற்கொலைக்கு முயன்றிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் கொலை தொடர்பாக பிலிப் மேத்யூ மீது முதல்நிலை கொலை வழக்கையும் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

English summary
kerala nurse stabbed and murdered by her friend in us
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X