நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரம்ப் சொன்னார்.. கதையை முடித்தோம்.. ஈரானின் சக்தி வாய்ந்த தலையை காலி செய்த அமெரிக்க ராணுவம்!

ஈராக்கில் இன்று காலை அமெரிக்கா நடத்திய தாக்குதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த உத்தரவின் பெயரில் நடந்தது என்று அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Trump warns Iran | ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

    நியூயார்க்: ஈராக்கில் இன்று காலை அமெரிக்கா நடத்திய தாக்குதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த உத்தரவின் பெயரில் நடந்தது என்று அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் தாக்குதல்நடத்தியது. இன்று காலை நடந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

    கடந்த சில மாதங்களாகவே டிரோன் விமானங்கள் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈரான் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று நடந்த தாக்குதல் அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

    பலி

    பலி

    இன்று காலை அமெரிக்க ராணுவம் ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே சென்ற இரண்டு வாகனங்களை தாக்கி அழித்தது. இதில் மொத்தம் 9 பேர் பலியானார்கள். இதில் ஈரானில் இருந்து பாக்தாத் வந்த முக்கியமான அரசு விருந்தாளிகள், உயர் அதிகாரிகள் சிலரும் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் அந்த உயர் அதிகாரிகள் யார் என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அதேபோல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார்.

    பென்டகன் என்ன

    பென்டகன் என்ன

    ஈராக்கில் இன்று காலை அமெரிக்கா நடத்திய தாக்குதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த உத்தரவின் பெயரில் நடந்தது என்று அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதை பல நாட்களாக திட்டமிட்டோம். இன்று டிரம்ப் எங்கள் பிளானை ஒப்புகொண்டார். அதன்பின் தாக்குதல் நடத்தினோம் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

    யார் இவர்

    யார் இவர்

    ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் அதிகாரம் மிக்கவராக திகழ்ந்தார். சிரியா போர் வர இவரும் ஒரு வகையில் காரணம். இவரை பலமுறை இப்படி கொல்ல சதி நடந்து இருக்கிறது.

    செம

    செம

    1998ல் இருந்தே இவர் அந்த ராணுவ ஜெனரல் பொறுப்பில் இருந்தார். சுலைமானி நினைத்தால் ஈரானிலும், ஈராக்கிலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் சுலைமானியை அமெரிக்க ராணுவம் கொலை செய்துள்ளது.

    English summary
    Killing of Iran Quad force Military General: On orders of the US President, We did, Confirms Pentagon officials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X