நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைதி பேச்சா?.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்

Google Oneindia Tamil News

Recommended Video

    UNSC meet | உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்

    நியூயார்க்: பாகிஸ்தானுடன் எப்போது அமைதி பேச்சுவார்த்தை என கேள்வி எழுப்பிய அந்நாட்டு நிருபர்களிடம் சென்ற இந்திய தூதர், உங்களிடம் இருந்தே தொடங்கலாம் என கூறி கைகுலுக்கி அவர்களை திக்குமுக்காடச் செய்தார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு பாகிஸ்தானும் சீனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கொண்டு சென்றது. மேலும் இதுகுறித்த ரகசிய ஆலோசனைக்கு பாகிஸ்தானும் சீனாவும் மற்ற உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தன.

    இந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில் இந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்

    தூதர்

    தூதர்

    ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் தையது அக்பருதீன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    தொடங்கும்

    அப்போது அவர் கூறுகையில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கை முழுக்க முழுக்க உள்விவகாரம் ஆகும். இதில் எந்த ஒரு நாடும் தலையிட முடியாது என்றார். அப்போது பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையை எப்போது இந்தியா தொடங்கும் என அந்நாட்டு நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    கைகுலுக்குதல்

    கைகுலுக்குதல்

    அப்போது அந்த நிருபரை நோக்கி சென்ற அங்கிருந்த 3 பாகிஸ்தான் நிருபர்களுடன் கைகுலுக்கிய அக்பருதீன், உங்களை நோக்கி நான் வந்துவிட்டேன். கைகுலுக்குவதன் மூலம் உங்களிடம் இருந்து தொடங்கலாம் என்றார்.

    தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும்

    தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும்

    இதை பார்த்த மற்ற பத்திரிகையாளர்கள் சிரித்தனர். பின்னர் அக்பருதீன் கூறுகையில் சிம்லா உடன்படிக்கையின்படி நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம். இவ்வாறு கூறுவதன் மூலம் நட்புக்கான கரத்தை நீட்டிவிட்டோம். இனி பாகிஸ்தானிடம் இருந்துதான் பதில் வர வேண்டும். அதற்காக காத்திருக்கிறோம். ஆனால் தீவிரவாதத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் தொடங்கலாம் என்றார்.

    English summary
    India's envoy Syed Akbaruddin says that Let him start with him and shaked hands with Pakistani Journalist for asking question on peace talks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X