நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நாடு.. ஒரே மத கொள்கைக்கு எதிராக போராடுவோம்.. ஆஸ்கர் மேடையில் கர்ஜித்த ஜோக்கர் ஹீரோ.. பரபரப்பு!

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே இனம், ஒரே மக்கள் என்ற கொள்கைக்கு எதிராக போராட வேண்டும் என்று ஜோக்கர் படத்திற்காக ஆஸ்கார் வென்ற வாக்கீன் பீனீக்ஸ் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே நாடு.. ஒரே மத கொள்கைக்கு எதிராக போராடுவோம்.. ஆஸ்கர் மேடையில் கர்ஜித்த ஜோக்கர் ஹீரோ.. - வீடியோ

    நியூயார்க்: ஒரே நாடு, ஒரே மதம், ஒரே இனம், ஒரே மக்கள் என்ற கொள்கைக்கு எதிராக போராட வேண்டும் என்று ஜோக்கர் படத்திற்காக ஆஸ்கார் வென்ற வாக்கீன் பீனீக்ஸ் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. எல்லோரும் எதிர்பார்த்தது போல இந்த வருடத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதை வாக்கீன் பீனீக்ஸ் பெற்றுள்ளார்.

    டிசி நிறுவனத்தின் ஸ்டான்ட் அலோன் படமான ஜோக்கர் படத்திற்காக வாக்கீன் பீனீக்ஸ் இந்த விருதை பெற்றுள்ளார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த முறை தப்பல... சிறந்த நடிகர் விருதை கைப்பற்றிய 'ஜோக்கர்' ஹீரோ ஜோக்குயின் பீனிக்ஸ்

    என்ன சொன்னார்

    சிறந்த நடிகருக்கான விருது பெற்ற வாக்கீன் பீனீக்ஸ் தனது பேச்சில், நான் பல விஷயங்களை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தேன். நாம் எல்லோரும் ஒன்றாக பல மோசமான விஷயங்களை சந்தித்து, எதிர்கொண்டு வருகிறோம். இதை பற்றி பேச இதுதான் சரியான நேரம். நாம் எல்லோரும் இதை ஒன்றாக அனுபவிக்கிறோம். இதை நாம் ஒன்றாக சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். பாலின ரீதியான துன்புறுத்தல்கள் இப்போதும் நிகழ்ந்து வருகிறது.

    என்ன பிரச்சாரம்

    என்ன பிரச்சாரம்

    மத ரீதியான துன்புறுத்தல்கள் நடக்கிறது. நிற ரீதியாக மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். பாலின தேர்வு காரணமாக மக்கள் இப்போதும் புறக்கணிக்கப்படும் நிலை இருந்து வருகிறது. பழங்குடி மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது. விலங்குகள் துன்புறுத்தப்படுகிறது. இதை எல்லாம் நாம் எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறோம். முக்கியமாக ஒரே நாடு ஒரே மதம் என்பதை நாம் எதிர்க்கிறோம்.

    நேரம் வந்துவிட்டது

    நேரம் வந்துவிட்டது

    ஒரே நாடு, ஒரே மதம், ஒரே இனம், ஒரே மக்கள், ஒரே பாலினம் தான் உலகை ஆள வேண்டும். மக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கொள்கை இருக்கிறது . இந்த கொள்கைக்கு எதிராக நாம் போராடும் நேரம் வந்துவிட்டது . இந்த கொள்கை கொண்டவர்கள் மற்றவர்களை மதிப்பது இல்லை. அதை எதிர்த்து போராடும் நிலை உருவாகி உள்ளது. நாம்தான் உலகின் மையம் என்று சிலர் நினைக்கிறார்கள்.

    என்ன கூறினார்

    என்ன கூறினார்

    நாம் இயற்கையை சூறையாடுகிறோம். இயற்கை வளங்கள் அனைத்தையும் நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இயற்கைக்கு நாம் எதுவும் கொடுப்பது இல்லை. நாம் அதிக அறிவுமிக்கவர்கள். நாம் இயற்கையை காக்க முடியும். நாம் இயற்கைக்கு அன்பை கொடுக்க முடியும். இந்த அறையில் பலர் எனக்கு பலமுறை வாய்ப்பு வழங்கி உள்ளனர். இப்படிப்பட்டதுதான் வாழ்க்கை. நாம் பிறருக்கு உதவ வேண்டும் . எல்லோரும் முன்னேற உதவ வேண்டும். இதுதான் மனித நேயம். இதுதான் வாழ்க்கை, என்று வாக்கீன் பீனீக்ஸ் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Lets talks against One Nation One Race says Joaquin Phoenix in Oscar Stage after getting the award.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X