நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“மின்னலைப் பிடித்து.. மின்னலைப் பிடித்து”.. இந்த வீடியோவை பார்த்தா நீங்களும் இப்படி தான் பாடுவீங்க!

விண்வெளியில் இருந்து படம்பிடிக்கப்பட்ட மின்னல் மின்னும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: விண்வெளியில் இருந்து படம்பிடிக்கப்பட்ட மின்னல் மின்னும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

மழை காலம் வந்துவிட்டாலே வானில் மின்னல்கள் கூத்தாடத் தொடங்கிவிடும். ஆனந்தம் தரக்கூடியது என்றாலும், சில விநாடிகளில் வந்து போகும் மின்னலை வெறும் கண்ணால் பார்ப்பது என்பது அபாயகரமான செயல். அப்படி செய்து கண் பார்வை இழந்தவர்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

Lightning seen from space is mesmerizing

பொதுவாக நாம் அனைவரும் மின்னல்களை தரையில் இருந்தபடி மேலே அண்ணாந்து தான் பார்த்திருப்போம். அதுவே நம் மனதில் ஒரு குதூகலத்தை ஏற்படுத்திவிடும். அப்படி இருக்கையில் விண்வெளியில் இருந்து கீழே மின்னல் மின்னுவதை பார்த்தால் மதி மயங்காதா?

அப்படி ஒரு வீடியோவைத்தான் நாசா வெளியிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் பாப் பென்கன் தனது சமூகவலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒன்பது விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோ விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டது.

அதில் வானில் மின்னல் மின்னுவது மேலே இருந்தபடி படமாக்கப்பட்டுள்ளது. மின்மினி பூச்சிகள் ஊதாப்பூ நிறத்தில் மின்னினால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கிறது மின்னல் மின்னுவது. வானத்தையே இரண்டாக பிளப்பது போல் நமக்கு காட்சியளிக்கு மின்னல்கள், ஏதோ டிம் டிப் விளக்கு போல் ஒளிர்க்கின்றன.

வேதரத்தினத்தை தொடர்ந்து பாஜகவிலிருந்து மேலும் சிலர்... பேச்சுவார்த்தை நடத்தும் திமுகவேதரத்தினத்தை தொடர்ந்து பாஜகவிலிருந்து மேலும் சிலர்... பேச்சுவார்த்தை நடத்தும் திமுக

இந்த மதி மயக்கும் மின்னல் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கிறங்கிபோய்விட்டனர். பல அற்புதங்களையும், அதிசயங்களையும் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் இயற்கை அன்னையின் தலைக்கு மேல் நின்று மின்னலை பார்ப்பது சாதாரண விஷயமா என்ன? நீங்களும் அதைப் பார்த்து மகிழுங்கள்.

English summary
NASA astronaut Bob Behnken, who is currently aboard the International Space Station, has shared a mesmerising view of "lightning from above".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X