நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோ கொரோனா கோ.. 'இந்த' ஓட்டலுக்கு போனா பயமில்லாமல் நிம்மதியா சாப்பிடலாம்!

அமெரிக்காவில் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பீதி ஏற்படாத வகையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள உணவகம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்று, வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பீதி ஏற்படாத வகையில் அதன் கட்டமைப்பை மாற்றி அமைத்து அசத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் உலகமே இப்போது ஆட்டம் கண்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க முடியாமல் பல நாடுகள் இன்று திண்டாடி வருகின்றன. பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சரிந்த வர்த்தகத்தை மீண்டும் உயர்த்த பல நிறுவனங்கள் கடுமையாக போராடி வருகின்றன.

மற்ற தொழில்களை ஒப்பிடும் போது உணவு தொழில் மட்டும் ஓரளவுக்கு தப்பிப்பிழைத்து இருக்கிறது. இருப்பினும் முன்பு போல் ஓட்டல்களுக்கு மக்கள் அதிகமாக செல்வதில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும், ஓட்டலுக்கு சென்று பார்சல் வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்து தான் சாப்பிடுகின்றனர். இதனால் உணவகங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

சாகசம் செய்ய முயற்சி.. நொடியில் மாறிய காட்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. இப்ப இதெல்லாம் தேவையா!சாகசம் செய்ய முயற்சி.. நொடியில் மாறிய காட்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. இப்ப இதெல்லாம் தேவையா!

 அமெரிக்க உணவகம்

அமெரிக்க உணவகம்

இந்த சூழலில் அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகம் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பீதி ஏற்படாத வகையில் தங்கள் ஓட்டலின் கட்டமைப்பை மாற்றியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லேடி பேர்ட் உணவகம் தான் அது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெகு நாட்கள் மூடப்பட்டிருந்த அந்த உணவகம் சமீபத்தில் தான் திறக்கப்பட்டது.

மாற்றுவழி

மாற்றுவழி

இருப்பினும் முன்பு போல் வாடிக்கையாளர்கள் வருவதில்லை. ஓட்டல்களில் சாப்பிட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமே அதற்கு காரணம். இதை உணர்ந்த அந்த உணவகத்தின் உரிமையாளர் மிஸ்டி, வாடிக்கையாளர்களின் பீதியை போக்க முடிவு செய்தார்.

 பசுமை குடில்கள்

பசுமை குடில்கள்

உணவகத்தின் பார்க்கிங் இடத்தில் பூச்செடிகள், மூலிகைச் செடிகள் உள்ளிட்ட தாவரங்களை கொண்டு பசுமையாக்கினார் மிஸ்டி. பின்னர் வாடிக்கையாளர்கள் சாப்பிடும் இடத்தை தகுந்து காற்றோட்டத்துடன், கண்ணாடியை கொண்டு வீடு போல் அமைத்தார். அதில் சாப்பாட்டு மேஜை, நாற்காலிகளை போட்டு உணவகத்தை மாற்றி அமைத்துவிட்டார்.

 கொரோனா பீதி தேவையில்லை

கொரோனா பீதி தேவையில்லை

அமெரிக்க அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் ஒவ்வொரு பசுமை குடிலுக்கும் இடையே 6 அடி இடைவெளி விட்டுள்ளார் மிஸ்டி. மேலும், ஒரு வாடிக்கையாளர் வந்து உணவருந்திவிட்டு சென்றதும், அந்த இடத்தை ஊழியர்கள் முழுமையாக தூய்மைப்படுத்தி விடுகின்றனர். இதனால் உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் உணவருந்திவிட்டு செல்லலாம்.

English summary
A restaurant in Los Angeles has transformed its parking lot into a garden filled with flowers, herbs and plants with private glass cabins for safe dining during the novel coronavirus pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X