நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 ஆண்டுகள்.. 8000 கிமீ.. ஹவாய் கடலில் தொலைந்த சர்ப்போர்ட் பிலிப்பைன்ஸில் கிடைத்த வினோதம் !

அமெரிக்காவின் ஹவாய் கடலில் தொலைந்து போன சர்ப்போர்ட் பிலின்ப்பைன்ஸ் நாட்டில் கிடைத்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் ஹவாய் கடலில் தொலைத்த தனது சர்ப்போர்ட்டை இரண்டு ஆண்டுகள் கழித்து பிலின்ப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடித்திருக்கிறார் சர்ப்பர் ஒருவர்.

அமெரிக்காவின் பசிபிக் கடலோரம் அமைந்துள்ள ஹவாய் மாநிலத்தைச் சேர்ந்தவர் டக் ஃபால்டர். அலைமிதவைப் பலகையை கொண்டு கடலில் சாகச விளையாட்டு விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் டக்.

இவர் தனது சர்ப்போர்ட்டை கடந்த 2018ம் ஆண்டு பசிபிக் கடலில் தொலைத்துவிட்டார். தனது சென்டிமெண்டான சர்ப்போர்ட் தொலைந்து போனதால் டக் மிகவும் அப்செட்டாகி விட்டார்.

கதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்!கதவை திறந்ததும் தலையில் தொப்பென விழுந்த பாம்பு.. சுதாரித்து துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்!

வேண்டுகோள்

வேண்டுகோள்

சர்ப்போர்டுடன் தான் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு, அதனை தேடி வந்தார். உள்ளூர் மீனவர்கள் கையில் அது கிடைத்திருந்தால், நிச்சயம் அது தனக்கு மீண்டும் கிடைத்துவிடும் என டக் நம்பிக்கையுடன் காத்திருந்தார். எனவே, யாரிடமாவது அது கிடைத்தால், தன்னிடம் ஒப்படைக்கும்படி தாழ்மையுடன் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நம்பிக்கை

நம்பிக்கை

உண்மையில் டக்கின் நம்பிக்கை வீண்போகவில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரது சமூகவலைதளப் பதிவை பார்த்துவிட்டு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜியோவானே பிரான்சுவேலா என்பவர் டக்கை தொடர்புகொண்டு அவரது சர்ப்போர்ட் தன்னிடம் இருப்பதாக கூறியிருக்கிறார்.

விற்பனை

விற்பனை

ஹவாய் கடற்பகுதியில் தொலைந்து போன அந்த அலைமிதவைப் பலகை தண்ணீரில் மிதந்தபடியே 8000 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சரங்கனி தீவில் ஒதுங்கி இருக்கிறது. அதனை கப்பலின் உடைந்த பாகம் என நினைத்த உள்ளூர் மீனவர் ஒருவர், பிரான்சுவேலாவிடம் 40 அமெரிக்க டாலருக்கு அதாவது இந்திய மதிப்பு படி ரூ.2939.44க்கு விற்பனை செய்துள்ளார்.

கண்ணில் பட்ட பதிவு

கண்ணில் பட்ட பதிவு

டக்கின் சர்ப்போர்ட்டை வாங்கிய பிரான்சுவேலா அதை வைத்து கடல் அலையில் மிதந்து விளையாடி உற்சாகமாக பொழுதை கழித்து வந்தார். இந்நிலையில் டக்கின் சமூகவலைதளப் பதிவு பிரான்சுவேலாவின் கண்ணில் பட்டிருக்கிறது. இதையடுத்து டக்கை தொடர்பு கொண்ட அவர், சர்ப்போர்ட் தன்னிடம் இருப்பதை தெரிவித்திருக்கிறார்.

எதிர்பார்ப்பில் டக்

எதிர்பார்ப்பில் டக்

இதனால் டக் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். விரைவில் பிலிப்பைன்ஸ் சென்று தனது சர்ப்போர்ட்டை மீட்டு வர டக் திட்டமிட்டுள்ளார். தனது விருப்பமான சப்போர்ட் கையில் கிடைத்தவுடன் மீண்டும் கடல் அலையில் மிதக்கக் காத்திருப்பதாக ஆர்வமுடன் தெரிவித்துள்ளார் டக்.

English summary
When big wave surfer Doug Falter lost his board in a wipeout in Hawaii, his best hope was for a local fisherman to pick it up. He never imagined it would be found more than 8,000 kilometres (5,000 miles) away in the southern Philippines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X