நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்பைடர் மேன், அயர்ன் மேனை உருவாக்கிய ஸ்டான் லீ.. மார்வெலின் பிதாமகன் காலமானார்!

காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நேற்று நள்ளிரவில் காலமானார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ காலமானார்-வீடியோ

    நியூயார்க்: காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நேற்று நள்ளிரவில் காலமானார்.

    அமெரிக்காவை சேர்ந்த ஸ்டான் லீ மார்வெல் நிறுவனத்தின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். மார்வெல் நிறுவனத்தின் காமிக் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களி உருவாக்கியவர் இவர்தான்.

    95 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான் லீ காலமானார். உலகம் முழுக்க ஹாலிவுட் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஸ்டான்லி மார்ட்டின் லீபர் என்று இயர்பெயர் கொண்ட இவர் 1922 டிசம்பர் 28ல் பிறந்து 95 வருட நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

    நள்ளிரவில் காலமானார்

    நள்ளிரவில் காலமானார்

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணிக்கு இவர் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக இவர் மரணம் அடைந்தார். நேற்று இவர் வீட்டிற்க்கு ஆம்புலன்ஸ் சென்று அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இவரது இழப்பு பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    எதை எல்லாம் உருவாக்கினார்

    எதை எல்லாம் உருவாக்கினார்

    ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், எக்ஸ் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், பிளாக் பந்தர், டெட்பூல், அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட உக்கியமான் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ. தனோஸ் உள்ளிட்ட மிக மோசமான வில்லன் பாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ. அவரின் மொத்த கனவுதான் மார்வெல் நிறுவனம் என்றால் மிகையாகாது.

    பெரிய சாதனை

    பெரிய சாதனை

    இவர் காமிக் புத்தகங்களை கோடிக்கணக்கில் விற்க வைத்து பலவே ஹாலிவுட்டிலும் பெரிய அளவில் தடம் பதித்தார். டிசி படங்களை ஓரம் கட்ட வைத்து, மார்வெலை உலகின் நம்பர் ஒன் காமிக் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார். ஸ்பைடர் மேன் டிரையாலஜி, அயர்ன் மேன் டிரையாலஜி, அவென்ஜர்ஸ் பாகங்கள், பென்டாஸ்டிக் 4, எக்ஸ் மேன் பாகங்கள், டெட்பூல் 1 /2 என்று இதுவரை தோல்வியே சந்திக்காத பிதாமகன் இவர்.

    பெரிய அதிர்ச்சி

    பெரிய அதிர்ச்சி

    உலகம் முழுக்க ஹாலிவுட் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவரின் இழப்பு காமிக் உலக ரசிகர்களை பெரிய வருத்தத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி உள்ளது. மார்வெல் நிறுவனம் இனி என்ன ஆகும், அதன் காமிக் ஹீரோக்கள் எப்போதும் போல மனதிற்கு நெருக்கமாக இருக்குமா என்பர் கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Marvel Super Hero creator Stan Lee dies at 95 in Los Angeles.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X