நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க தூதரகத்திற்கு மீண்டும் ஸ்கெட்ச்.. இன்று அதிகாலை ஈராக்கில் தாக்குதல்.. பெரும் பதற்றம்!

அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் பாக்தாத்தில் உள்ள தூதரகம் அருகே 4வது முறையாக தாக்குதல் நடந்துள்ளது.

ஈரான் அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படியே அடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சண்டை தற்போது பெரிதாக தொடங்கி உள்ளது.

ஈரானின் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதில் இருந்தே இந்த சண்டை முடியாமல் நடந்து வருகிறது. ஈரான் தொடர்ந்து அமெரிக்காவை தாக்கி வருகிறது.

பதைபதைக்கும் மக்கள்.. தோல்வி அடைந்த முயற்சிகள்.. சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1662 ஆனது! பதைபதைக்கும் மக்கள்.. தோல்வி அடைந்த முயற்சிகள்.. சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 1662 ஆனது!

என்ன தாக்குதல்

என்ன தாக்குதல்

இந்த நிலையில் அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் பாக்தாத்தில் உள்ள தூதரகம் அருகே 4வது முறையாக தாக்குதல் நடந்துள்ளது. ஈரான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.தூதரகம் அருகே ராக்கெட்டுகள் விழுந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் எத்தனை ராக்கெட் தாக்கியது என்று கூறவில்லை.

ஆனால்

ஆனால்

ஆனால் இதனால் எத்தனை பேர் பலியானார்கள் என்று தெரியவில்லை. இது தொடர்பான முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அமெரிக்கா இதில் முக்கியமான விஷயங்களை மறைப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த தூதரகம் இதுவரை நான்கு முறை தாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒருமுறை கூட அமெரிக்கா இதற்கு பதிலடி கொடுக்கவில்லை. ஏன் அமெரிக்கா எதுவும் செய்யாமல் உள்ளது என்று கேள்வி எழுந்துள்ளது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

ஆனால் அமெரிக்கா தூதரகம் அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை. அதேபோல் அமெரிக்காவும் ஈரான் மீதுதான் பழி போடுகிறது. ஆனால் ஈரான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

ஈரான் அரசு

ஈரான் அரசு

ஈரான் அரசு சார்பாக யாரும், நாங்கள்தான் தங்கினோம் என்று கூறவில்லை. கடந்த வாரம் இதேபோல் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகளை வெளியே செல்ல வேண்டும் என்றும் ஈரான் கூறி வருகிறது. இதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

English summary
Shocking: Missile attack on the US embassy in Iraq for the fourth time in the row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X