நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிலவில் மனிதன் காலடி வைத்த 50வது ஆண்டு தினம்... அமெரிக்காவில் கோலாகல கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்து 50 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைய இருப்பதை முன்னிட்டு, அமெரிக்காவில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 'நாசா' விண்வெளி மையத்தின் சார்பில் 1969 ஜூலை 16ல் அப்பல்லோ- 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் மைக்கேல் கோலின்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.

Moon Landing: Fifty years ends today, Celebration in America

இந்த விண்கலம் ஜூலை 20ல் (இந்திய நேரம் நள்ளிரவு 12.48 மணிக்கு) நிலவில் இறங்கியது. 6 மணி நேரம் கழித்து நீல் ஆம்ஸ்டிராங், விண்கலத்தில் இருந்து இறங்கி நிலவில் காலடி வைத்தார். இதன் அடையாளமாக அமெரிக்காவின் தேசியக் கொடியையும் நிலவில் பறக்க விட்டார். 20 நிமிடம் கழித்து எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினார். விண்வெளியில் வீரர்கள் தங்களின் உணவுக்கு பன்றி இறைச்சி, சுகர் குக்கீஸ், திராட்சை ஜூஸ், காபி எடுத்துக்கொண்டனர்.

அடேங்கப்பா.. வெறும் 3 மாசத்தில்.. ஏடாகூடமாக உயர்ந்த புதிய நீதிக் கட்சி ஏசிஎஸ்-ஸின் சொத்து! அடேங்கப்பா.. வெறும் 3 மாசத்தில்.. ஏடாகூடமாக உயர்ந்த புதிய நீதிக் கட்சி ஏசிஎஸ்-ஸின் சொத்து!

பூமியில் இருந்து 3.84 லட்சம் கி.மீ., துாரம் கடந்து 76 மணி நேரத்தில் நிலவை விஞ்ஞானிகள் அடைந்தனர். 6அப்பல்லோ - 11 விண்கலத்தை தயாரிக்க 6 ஆண்டுகள் ஆனது. இதற்கான செலவு ரூ. 1.74 லட்சம் கோடி ஆகும்.

உலகமே வியந்து பார்த்த இந்த அரிய நிகழ்வின் 50 வது ஆண்டு விழா அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் விண்வெளி அருங்காட்சியகத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அப்போலோ 11 விண்கலத்தின் மாதிரி வடிவம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் விண்கலத்தின் மாதிரி வடிவத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். இதே போன்று, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நீல் ஆம்ஸ்டிராங் 1930 ஆகஸ்ட், 5ல் பிறந்தார். பி.எஸ்., (ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்), எம்.எஸ்., (ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்) படித்தவர். 2012 ஆகஸ்ட் 25ல் மறைந்தார்.

English summary
Moon Landing: Fifty years ends today Neil Armstrong put a flag on the moon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X