நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா.. 100க்கும் அதிகமான வேக்சின்களை உருவாக்க முடியும்.. அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனாவிற்கு எதிராக 100க்கும் அதிகமான தடுப்பு மருந்துகளை உருவாக்க முடியும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் எல்லாம் திணறி வருகிறது. கொரோனா இத்தனை வீரியமாக பரவ காரணம், அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான். ரஷ்யா இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினாலும், இதை இன்னும் பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், நோவாவேக்ஸ், சினோவேக்ஸ், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து சொதனையில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் எல்லாம் தீவிரமாக முயன்று வருகிறது.

டிபி தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துகிறது.. ஜெர்மனியின் 3வது கட்ட ஆய்வில் நம்பிக்கை தகவல் டிபி தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்துகிறது.. ஜெர்மனியின் 3வது கட்ட ஆய்வில் நம்பிக்கை தகவல்

100 மருந்துகள்

100 மருந்துகள்

இந்த நிலையில் கொரோனாவிற்கு எதிராக 100க்கும் அதிகமான தடுப்பு மருந்துகளை உருவாக்க முடியும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். உலகம் முழுக்க இருக்கும் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள், மருந்துகளில் பயன்படும் கெமிக்கல்களை பயன்படுத்தி இந்த தடுப்பு மருந்துகளை உருவாக்க முடியும் இவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

ஆராய்ச்சி குழு

ஆராய்ச்சி குழு

இந்த ஆராய்ச்சி குழுவில் ஆனந்த சங்கர் ராய் என்ற இந்திய விஞ்ஞானி ஒருவரும் இடம்பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் இவர்கள் இந்த தடுப்பு மருந்து ஆராய்ச்சியை செய்து வருகிறார்கள். இது குறித்து அந்த ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ள கருத்தில், தற்போது கொரோனா தடுப்பு மருந்தின் தேவை மிக முக்கியமானதாக இருக்கிறது.

அதிக தேவை

அதிக தேவை

வேகமாக மருந்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்காக நாங்கள் கொரோன தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பைப்லைன் (drug discovery pipeline) ஒன்றை உருவாக்கி உள்ளோம். இந்த பைப்லைன் என்பது ஏஐ தொழில்நுட்பம் செயல்பட கூடிய தடுப்பு மருந்துகளை சோதனை செய்ய கூடிய ஒரு கணினி தொழில்நுட்ப கருவியாகும். இந்த பைப்லைன் மூலம் எந்த மருந்துகள், கெமிக்கல்கள் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியும்.

கலவையை உருவாக்குவோம்

கலவையை உருவாக்குவோம்

பல்வேறு மருந்துகள் மற்றும் கெமிக்கல்கள் கலவைகளை உருவாக்கி, அது கொரோனாவிற்கு எதிராக எப்படி செயல்படும் என்பதை இந்த பைப்லைன் கணினி மூலமே கண்டுபிடிக்கும்.எந்த மருந்து செயல்படாது. எது செயல்படும் என்பதை எல்லாம் சோதனைகள் மூலமும், முடிவுகள் மூலம் இந்த ஏஐ தொழில்நுட்பம் கொண்ட பைப்லைன் கண்டுபிடிக்கும்.

பல்வேறு மருந்துகள்

பல்வேறு மருந்துகள்

இதற்கு முன் இருக்கும் பல்வேறு நோய்களுக்கான தடுப்பு மருந்துகளில் கொரோனாவின் சில செயல்பாட்டை அழிக்கும் திறன்கள் இருக்கிறது . அதாவது கொரோனா செல்களுக்கும் செல்வதை சில தடுப்பு மருந்துகள் தடுக்கிறது. சில தடுப்பு மருந்துகள் கொரோனா இரட்டிப்பாவதை தடுக்கிறது. இப்படி சில மருந்துகளையும் பைப்லைன் மூலம் சோதனை செய்து வருகிறோம்.

வேதி மூலக்கூறுகள்

வேதி மூலக்கூறுகள்

சில வேதி மூலக்கூறுகள் கொரோனா உடலுக்குள் செல்வதையும் அது பல்கி பெருகுவதையும் தடுக்கிறது. இந்த வேதி மூலக்கூறுகளை கண்டுபிடிக்க எங்கள் பைப்லைன் ஆராய்ச்சி உதவி செய்யும். இன்னொரு பக்கம் உடலில் இருக்கும் 65 மனித புரோட்டீன் மூலக்கூறுகள், கொரோனா புரோட்டீன்கள் மூலம் பாதிக்கப்படைகிறது. இந்த புரோட்டீன்கள்தான் கொரோனா உடலில் பெருக காரணமாக அமைகிறது.

புரோட்டீன்கள் ஆராய்ச்சி

புரோட்டீன்கள் ஆராய்ச்சி

இந்த புரோட்டீன்கள் குறித்து தனித்தனியாக எங்கள் குழு ஆய்வு செய்துள்ளது. 65 புரோடீன்கள் குறித்தும் தனி தனியாக குழு ஆய்வு செய்துள்ளோம். அதன்படி இந்த புரோட்களை கொரோனா புரோட்டீன்கள் தாக்குவதை தடுக்கும் வகையில் வேதி மூலக்கூறுகள் சில இருப்பதை கண்டுபிடித்து உள்ளோம், என்று இவர்கள் கூறியுள்ளனர். 10 மில்லியனுக்கும் அதிகமான வேதி மூலக்கூறுகளிடம் கொரோனாவை தாக்கும் திறன் இருப்பதை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர் .

சிறந்தது எது

சிறந்தது எது

இதில் 65 மனித புரோடீன்களை காக்கும் சிறந்த வேதி மூலக்கூறுகளை இவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதில் சில வேதி மூலக்கூறுக நாம் ஏற்கனவே பல்வேறு மருந்துகளில் பயன்படுத்தி வருகிறோம். இந்த வேதி மூலக்கூறுகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனாவில் இருந்து எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பக்க விளைவு இல்லாத மருந்துகளை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

செம முடிவு

செம முடிவு

இதன் மூலம் 100க்கும் அதிகமான மருந்து வகைகளை நாம் உருவாக்க முடியும். அதில் இருந்து சிறந்த ஒன்றை நாம் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்று இவர்கள் கூறியுள்ளனர். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் கொரோனா வைரசுக்கு எதிராக ரெமிடிஸ்வர் மருந்து நல்ல பலன் அளிக்கிறது, இந்த மருந்து பெரிய வகையில் நம்பிக்கை தருகிறது என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (The US National Institute of Allergy and Infectious Diseases -NIAID) தெரிவித்துள்ளது.

மருந்து எப்படி

மருந்து எப்படி

கில்லட் சைன்ஸ் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இந்த மருந்தை இந்தியாவில் சைடஸ் (Zydus) நிறுவனம் ரூ.2800க்கு 100 மில்லி கிராம் விற்பனை செய்யப்படுகிறது. ரெம்டெக் (Remdac) என்ற பெயரில் இந்த மருந்தை சைடஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. அதேபோல் ஹெட்ரோ லெப்ஸ் லிமிட்டட்,சிப்லா. மைலான் என்வி, ஜூபிலியன்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ரெமிடிஸ்வர் மருந்தை விற்பனை செய்ய உள்ளது.

English summary
More than 100 potential vaccines identified says US research on COVID Vaccines in California University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X