நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர்.. சீனாவில் உள்ள 200 யு.எஸ் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகை!

அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் காரணமாக தற்போது சீனாவில் உள்ள 200 அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு மாற திட்டமிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் காரணமாக தற்போது சீனாவில் உள்ள 200 அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு மாற திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகளின் வரி விதிப்பு முறை குறித்து நிறைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அமெரிக்கா பிற நாடுகளின் பொருட்களுக்கு குறைவாக வரி விதிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் பொருட்களுக்கு பிற நாடுகள் அதிக வரி விதிக்கிறது என்று டிரம்ப் அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறார்.

சீனா மீது இது தொடர்பாக அவர் அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறார். சீனாவில் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஃபனி.. இன்று அதிதீவிர புயலாக மாறும்.. சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா? ஃபனி.. இன்று அதிதீவிர புயலாக மாறும்.. சென்னையிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது தெரியுமா?

என்ன வரி

என்ன வரி

அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25% வரி விதிக்கப்படுகிறது. சீனாவில் அமெரிக்க பொருட்களுக்குத்தான் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை இன்னும் சில தினங்களில் அதிகப்படுத்தவும் சீனா முடிவெடுத்து உள்ளது.

அமெரிக்கா எப்படி

அமெரிக்கா எப்படி

ஆனால் அமேரிக்காவில் சீன பொருட்களுக்கு குறைவான வரியே விதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 2.5% வரிதான் விதிக்கப்படுகிறது. ஆனால் சீனா தனது வரிவிதிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால், அமெரிக்காவும் தனது வரிவிதிப்பை அதிகப்படுத்த முடிவெடுத்துள்ளது.

என்ன செய்ய போகிறார்கள்

என்ன செய்ய போகிறார்கள்

இதனால் தற்போது அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகம் போர் தொடங்கி உள்ளதாக உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் சீனாவில் உள்ள முக்கியமான 200 அமெரிக்கா நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர முடிவெடுத்து உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்றுதான் வெளியானது.

இந்தியா

இந்தியா

நடந்து வரும் லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் இந்த 200 நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருவதால் இந்தியர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் . இதனால் ஐடி நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பு உருவாகும் என்று கூறுகிறார்கள்.

English summary
More than 200 USA companies will move to India from China after Lok Sabha elections after Tax issues in China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X