நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30 நிமிடத்தில் கொரோனாவை கொல்கிறது.. ஆச்சர்யம் தந்த "மவுத் வாஷ்".. யுகே ஆய்வில் கண்டுபிடிப்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ்கள் கொரோனாவை கொல்லும் திறனை கொண்டு இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யுனைட்டட் கிங்கிடமில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. அங்கு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ் மூலம் கொரோனாவை கொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.

வாயை சுத்தப்படுத்த உதவும் மவுத் வாஷ் லோஷன்கள் மூலம் கொரோனாவை கொல்ல முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

Operation Warp Speed: அமெரிக்காவிற்கு கை கொடுத்த Operation Warp Speed: அமெரிக்காவிற்கு கை கொடுத்த "வேக்சின்" அஸ்திரம்.. வேலை செய்யும் டிரம்ப் பிளான்

முதல் கட்டம்

முதல் கட்டம்

கார்டிப் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டு இருக்கும் இந்த ஆய்வு முதல் கட்ட முடிவுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வின் படி மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ் கொரோனாவை உடனே கொல்கிறது. கொரோனா வைரஸ் உடன் தொடர்பு கொண்ட 30 நொடிகளில் அந்த வைரஸை மவுத் வாஷ் கொல்கிறது.

எப்படி

எப்படி

மவுத் வாஷ்களில் இருக்கும் சிபிசி எனப்படும் cetylpyridinium chloride (CPC) வேதிப்பொருள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மவுத் வாஷ்களில் 0.07 % க்கும் அதிகமாக சிபிசி இருந்தால் அது எளிதாக கொரோனாவை கொல்கிறது. கொரோனாவை கொல்லும் காரணியாக இது செயல்படுகிறது என்கிறார்கள்.

யார்

யார்

அந்த பல்கலைக்கழத்தில் இருக்கும் பேராசிரியர் டேவிட் தாமஸ் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. Dentyl எனப்படும் நிறுவனத்தின் மவுத் வாஷில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இது ஆய்வு கூட சோதனை ஆகும். ஆய்வு கூடத்தில் கொரோனாவை இந்த மவுத் வாஷ் கொன்றுள்ளது.

மக்கள்

மக்கள்

மக்களிடம் இந்த மவுத் வாஷை வைத்து சோதனை செய்ய வேண்டும். அதன்பின்பே முழுமையான முடிவுகள் தெரியும். இந்த சோதனைகளை 2021ல் முடிப்போமென்று கார்டிப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த மவுத் வாஷ் கொரோனா பரவலை தடுப்பதில் பெரிய பங்கு வகிக்கும் என்று அந்த பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அதே சமயம் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை இது குணப்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

கொரோனாவிற்கு எதிராக பிரிட்டனில் தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டர்செனகா நிறுவனம் இணைந்து தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அதேபோல் கொரோனாவிற்கு எதிராக ஃபைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மவுத் வாஷ் மூலம் கொரோனா அழியும் என்று ஆய்வு முடிவுகள் ஆச்சர்யம் அளிக்கிறது.

English summary
Mouthwash Kills Coronavirus in 30 seconds says An UK research.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X