நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீலம், பச்சை.. மாயமாக தோன்றி மறைந்த வெளிச்சம்.. நாசாவை வியக்க வைத்த ஒளி.. வானத்தில் புது மர்மம்!

விண்வெளியில் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தோன்றிய ஒளிகள் நாசா விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: விண்வெளியில் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தோன்றிய ஒளிகள் நாசா விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆகாயத்தில் நட்சத்திரங்களை ஆராய்வதற்காக நாசா அமைத்து இருக்கும் தொலைநோக்கிகளில் முக்கியமானது நியூஸ்டார் தொலைநோக்கி. பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து இது அமைக்கப்பட்டுள்ளது. இது சூப்பர்நோவாவில் ஏற்படும் வெடிப்புகளை ஆராய்ச்சி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய நட்சத்திரங்கள் வெடித்து சிதறுவதுதான் சூப்பர் நோவா எனப்படும். பொதுவாக சூரியனை விட பெரிய நட்சத்திரங்கள் வெடித்து சிதறும் நிகழ்வுகள் சூப்பர் நோவா என்று அழைக்கப்படும். இதை ஆராய்ச்சி செய்யவே நியூஸ்டார் தொலைநோக்கி நாசா அமைத்துள்ளது.

தெறிக்கவிடும் டி.கே.சிவகுமார்.. அமலாக்கத்துறை பிடியில் இருந்தபடி, வெளியான வீடியோதெறிக்கவிடும் டி.கே.சிவகுமார்.. அமலாக்கத்துறை பிடியில் இருந்தபடி, வெளியான வீடியோ

என்ன

என்ன

இப்படி நட்சத்திரங்கள் வெடிக்கும் போது பெரிய அளவில் வெளிச்சம் ஏற்படும். இந்த வெளிச்சம் மற்ற நட்சத்திரங்கள் பலவற்றை மொத்தமாக மறைக்கும் நிகழ்வுகள் கூட நடந்துள்ளது. இதனால் புது புது பொருட்கள் கூட ஆகாயத்தில் உருவாகும். இந்த நிலையில்தான் நட்சத்திர வெடிப்பு ஒன்றை ஆராயும் போது, நியூஸ்டார் தொலைநோக்கி வண்ணமயமான நிறங்களை கண்டுபிடித்துள்ளது.

கலர்

கலர்

அதன்படி வானத்தில் இரண்டு நீல நிற புள்ளிகளும், ஒரு பச்சை நிற புள்ளியும் தெரிந்துள்ளது. முதலில் நீல நிற புள்ளிகள் இரண்டு தெரிந்தது. இந்த பிரகாசமான புள்ளிகள் தோன்றிய சில நிமிடத்தில் மறைந்தது. அதன்பின் 10 நாட்கள் கழித்து பச்சை நிற பெரிய புள்ளி ஒன்று தோன்றி உள்ளது. இது சில நொடிகளில் மறைந்தது.

என்ன பெயர்

என்ன பெயர்

இந்த பச்சை நிறை புள்ளியை ULX புள்ளி என்று அழைக்கிறார்கள். இது ultraluminous எக்ஸ் ரே மூலம் உருவான வெளிச்சம் என்று கூறுகிறார்கள். ஆனால் இது உடனே தோன்றி மறைந்துவிட்டது. அதனால் இது எப்படி உருவானது என்று யாருக்கும் தெரியவில்லை. இது உருவாக காரணம் இன்னும் தெரியவில்லை.

என்ன விண்வெளி

என்ன விண்வெளி

இந்த புள்ளிகளுக்கு ULX -4 என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். பொதுவாக விண்வெளியில் உருவாகும் கருந்துளைகள், ஈர்ப்பு விசை மூலம் அருகில் இருக்கும் கிரகங்களை தனக்குள் இழுத்துக்கொள்ளும். அந்த கிரகங்கள், நட்சத்திரங்கள் அந்த துளைக்குள் செல்லும் முன் பெரிய ஒளியை ஏற்படுத்தும்.

தெரியவில்லை

தெரியவில்லை

இந்த வண்ணமயமான ஒளிகள் அப்படி தோன்றி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதன் நிறம் இப்படி இருக்க என்ன காரணம் என்று முழுமையாக தெரியவில்லை. இந்த வண்ணமயமான மர்மம் குறித்து நிறைய யுகங்கள் வெளியாகி உள்ளது. ஆனால் உறுதிப்படுத்தக் கூடிய எந்த முடிவும் வெளியிடப்படவில்லை.

English summary
Mysterious colorful light spotted in Space: NASA starts an investigation into the matter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X