நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட டிரம்ப்பை பார்த்து இப்படியா செய்வது?.. ஒரே கைதட்டலால் உலக வைரலான பெண்!

அதிபர் டிரம்ப்பை பார்த்து அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோச்சி கிண்டலாக கைதட்டியது பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிரம்பை பார்த்து ஒரே கைதட்டல்.. உலக வைரல் ஆன பெண்- வீடியோ

    நியூயார்க்: அதிபர் டிரம்ப்பை பார்த்து அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோச்சி கிண்டலாக கைதட்டியது பெரிய வைரலாகி உள்ளது.

    ஆசிய நாடுகளில் ஒரு நாட்டின் அதிபருக்கோ, பிரதமருக்கோ எதிராக பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் ஓரளவிற்கு இதில் கண்டிப்பு காட்டப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் அமெரிக்காவில் அப்படி கிடையாது, அதிபர் டிரம்பை நிர்வாணமாக கார்ட்டூன் போல வரைந்து செய்திகள் வெளியிட்டாலும் நடவடிக்கை பாயாது.

    அவரது டிவிட்டுகளை பிரிண்ட் செய்த செருப்பு கூட சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் பாராளுமன்றத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது.

    என்ன நடந்தது

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அவையில் பேசிக்கொண்டு இருந்தார். அதில் ''அமெரிக்காவில் கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டும். இங்கு நாம் ஒருவரை ஒருவர் விமர்சிக்கலாம். ஆனால் யாரிடமும் வெறுப்பு அரசியலை கடைபிடிக்க கூடாது. வெறுப்பு அரசியல் தவறானது'' என்று கூறினார்.

    சூப்பர் ரியாக்சன்

    சூப்பர் ரியாக்சன்

    இதை கேட்டவுடன் சபாநாயகரும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான நான்சி பெலோச்சி அதிர்ந்து போனார். அட நம்ம டிரம்ப்பா இப்படி பேசுவது என்று ஆச்சர்யப்பட்டு கைதட்டினார். ஆனால் அவர் கைதட்டிய விதம்தான் தற்போது வைரலாகி உள்ளது.

    வேண்டும் என்று செய்தது

    வேண்டும் என்று செய்தது

    வேண்டும் என்றே டிரம்ப்பை கோவத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர் அப்படி கைதட்டினார். டிரம்ப்பின் முகத்திற்கு பக்கத்தில் கையை கொண்டு சென்று, அவரை கிண்டல் செய்யும் விதமாக, காமெடியாக இப்படி கைதட்டினார். இதுதான் தற்போது இணைய வைரலாகி உள்ளது. இதை வைத்து பலரும் பல விதமாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

    கிளீன்

    எங்க வீட்டு பாத் ரூமை கிளீன் பண்ண அப்பறம் என் மனைவிக்கிட்ட இப்படித்தான் போய் நான் சொல்வேன், என்று இவர் கூறியுள்ளார்.

    அட போங்கய்யா

    எங்க அம்மா என்னோட பேஸ்புக் போஸ்ட்டுக்கு எல்லாம் இப்படித்தான் வேண்டா வெறுப்பா லைக் போட்டு காண்டா மிருகமுன்னு கமெண்டு பண்ணுவாங்க!

    அதேதான்

    பேட்மேன் படத்துல வர அதே வில்லத்தனமான ஜோக்கர் கிளாப்ஸ்!

    English summary
    Nancy Pelosi claps for US president Donald Trump becomes new Hit Meme on Internet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X