என்ன சொல்றீங்க! பூமியில் இருந்து நிலவிற்கு போன நீர்.. சந்திரனில் கேம்ப் அமைக்கும் நாசா.. சுவாரசியம்!
நியூயார்க்: பூமியில் இருந்து நிலவிற்கு சென்ற தண்ணீரை வைத்து நிலவில் குடியேற்றம் செய்யும் திட்டத்தை நாசா ஆலோசித்து வருவதாக ஆராய்ச்சி கட்டுரை ஒன்று தெரிவித்துள்ளது. என்னடா இது நமக்கே தண்ணீர் பிரச்சனை இருக்கிறது.. பூமியில் இருந்து நிலவிற்கு எப்படி தண்ணீர் சென்றது என்று கேட்கிறார்களா.. வாருங்கள் எப்படி என்று பார்க்கலாம்!
நிலவில் திரவமாக தண்ணீர் இல்லை என்றாலும்.. ஆங்காங்கே பல இடங்களில் உறைந்த நிலையில் ஐஸ் பாறைகளாக தண்ணீர் காணப்படுகிறது. நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் சந்திராயன் மூலம் இஸ்ரோதான் கண்டுபிடித்தது.
இந்தியாவின் இந்த கண்டுபிடிப்பை பின்னர் நாசாவும் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

நாசா நிலவு
இந்த நிலையில்தான் நாசா நிலவில் பேஸ் அமைக்கும் ஆலோசனையில் உள்ளது. அதாவது நிலவிலேயே தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு வசதியாக அங்கு கேம்ப் போன்று அமைக்கும் திட்டத்தில் நாசா உள்ளது. அதோடு வேற்று கிரகங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நிலவில் இருந்து இன்னும் எளிதாக செல்ல முடியும். இதனால் நிலவில் மிகப்பெரிய அளவில் கட்டுமானங்களை நாசா தொடங்க உள்ளது.

நிலவு தண்ணீர்
இதற்காக நாசாவின் Artemis டீம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. 2025ல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் நிலவிற்கு மீண்டும் நாசா மனிதர்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அதே வருடம் அங்கு கட்டுமானத்தை தொடங்கும் பணிகளிலும் நாசா இறங்க உள்ளது. ஆனால் நிலவில் இருக்கும் கேம்பிற்கு தண்ணீர் தேவை. இதை சரிக்கட்ட நாசாவிடம் நல்ல திட்டம் ஒன்று இருக்கிறது.

ஆய்வு கட்டுரை
அதன்படி Scientific Reports என்ற ஆய்வு இதழில் வெளியான கட்டுரையில் நாசாவின் பிளான் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாசா நிலவின் தெற்கு பகுதியில் இந்த கட்டுமானங்களை செய்யும் முடிவில் உள்ளது. நிலவின் தெற்கு பகுதியில் தண்ணீர் உறைந்த நிலையில் காணப்படுகிறது. அங்கு அதிக அளவில் ஐஸ் பாறைகள் உள்ளன.

எவ்வளவு தண்ணீர்
எந்த அளவிற்கு சென்றால் சுமார் 3500க்கும் அதிகமாக கன கிலோ மீட்டர் அளவிற்கு அங்கு தண்ணீர் உறைந்து உள்ளது. அதாவது அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான ஹுரன் அளவிற்கு இங்கு தண்ணீர் உறைந்த நிலையில் காணப்படுகிறது. இதைத்தான் உருக்கி அப்படியே பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. அதெல்லாம் சரி இதற்கும் பூமிக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். நிலவில் இருக்கும் பெரும்பாலான ஐஸ் பாறைகளில் இருக்கும் நீர் பூமியில் இருந்து சென்று இருக்கலாம் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன்
அதாவது பூமியின் வெளிவட்ட பாதியில் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ions நிலவினால் ஈர்க்கப்பட்டு அதன் வட்டப்பாதைக்குள் சென்று இருக்கலாம். பின்னர் நிலவில் சேர்ந்து அங்கு இவர் குளிர் காரணமாக ஐஸாக மாறி இருக்கலாம். நிலவிற்கு என்று தனிப்பட்ட காந்த புலம் இல்லை என்பதால் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ions பூமிக்கு திருப்பு அனுப்பப்படாமல் நிலவிலேயே இருந்திருக்கலாம் என்று அந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.

திட்டம் என்ன?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி நடந்து இருக்கும். அந்த நீர் குளிர் காரணமாக ஐஸ் கட்டிகளாக இப்போது மாறி இருக்கலாம். பூமியில் இருந்து நிலவிற்கு சென்ற அந்த நீரை தற்போது மீண்டும் உருக்கி அங்கு கேம்ப் அமைக்கும் போது பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது. நிலவில் கேம்ப் அமைக்க ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் தீவிரமாக முயன்று வரும் நிலையில்தான் இந்த ஆய்வு கட்டுரை வெளியாகி உள்ளது.