நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வியாழனுக்கு அருகில் மிதக்கும் பச்சை நிற மர்ம பொருள்.. ஏலியன் விமானமா?.. நாசாவின் திக் போட்டோ!

வியாழன் கிரகத்திற்கு அருகில் பச்சை நிறத்தில் மிதந்து கொண்டிருந்த பொருள் ஏலியன்கள் பயன்படுத்தும் விமானமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வியாழனுக்கு அருகில் மிதக்கும் பச்சை நிற மர்ம பொருள்- வீடியோ

    நியூயார்க்: வியாழன் கிரகத்திற்கு அருகில் பச்சை நிறத்தில் மிதந்து கொண்டிருந்த பொருள் ஏலியன்கள் பயன்படுத்தும் விமானமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

    தற்போது உலகம் முழுக்க ஏலியன்கள் குறித்த விவாதங்கள் அதிகம் ஆகியுள்ளது. முக்கியமாக ஏலியன்கள் விமானம் என்று அழைக்கபடும் '' யுஎஃப்ஓ (UFO- Unidentified flying object)'' பற்றிய நிறைய ஆராய்ச்சிகள், விவாதங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    பூமியில் நிறைய பேர் இந்த யுஎஃப்ஓவை பார்த்ததாக கூறி இருக்கிறார்கள். அதே சமயம் இதெல்லாம் கட்டுக்கதை என்று மறுப்பவர்களும் உள்ளனர். இந்த நிலையில் வியாழன் கிரகத்தில் அப்படி ஒரு யுஎஃப்ஓ சுற்றுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

    [எல்லாத்தையும் மேலே இருக்கவன் பாத்துப்பானு சொல்வீங்களே.. உங்க நெலமை இப்படி ஆயிடுச்சே சாமி!]

    வியாழன் கிரகம்

    வியாழன் கிரகம்

    வியாழன் கிரகத்தில் இதுவரை உயிரினங்கள் இருப்பதற்கான அடையாளம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாசா வியாழனில் உயிரினங்கள் இருப்பதற்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று கூறியுள்ளது. அங்கு மனிதன் வாழ முடியாமல் இருக்கலாம். ஆனால் வேறுவிதமான உயிரினங்கள் வாழ அங்கு சூழ்நிலை நிலவலாம் என்று கூறியுள்ளது.

    கண்டுபிடித்தனர்

    கண்டுபிடித்தனர்

    இந்த நிலையில்தான் வியாழன் கிரகத்தை பற்றி நாசா புகைப்படம் ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதில் வியாழன் கிரகத்திற்கு அருகில் யுஎஃப்ஓ போல ஒரு பெரிய புள்ளி இருக்கிறது. இது அந்த கிரகத்தின் மேல் இல்லாமல் கிரகத்திற்கு வெளியே கொஞ்சம் தள்ளி மிதப்பது போல அமைந்து இருக்கிறது.

    பச்சை நிறம்

    பச்சை நிறம்

    பச்சை நிறத்தில் இருக்கும் இந்த புள்ளிதான் யுஎஃப்ஓ என்று சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதன் வடிவமைப்பு சரியாக யுஎஃப்ஓ வடிவமைப்புடன் பொருந்தி போகிறது என்று கூறியுள்ளனர். இதற்கு முன் நாசா வெளியிட்ட இதே கோணத்தில் இருக்கும் எந்த புகைப்படத்திலும் இந்த யுஎஃப்ஓ சாதனம் போன்ற பொருள் இல்லை என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    விளக்கம் இல்லை

    விளக்கம் இல்லை

    அதே சமயத்தில் நாசா இதுகுறித்து இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. அதே சமயம் இது யுஎஃப்ஓ கிடையாது என்று மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் மீண்டும் ஏலியன்கள் குறித்த விவாதம் அதிகரித்து இருக்கிறது. இது போட்டோஷாப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்று இதை மறுப்பவர்கள் கூறியுள்ளனர்.

    English summary
    NASA photo triggers doubts over UFO activity on Jupiter planet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X