நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12 நாளில் தென்னிந்தியாவை சிதைத்த மோசமான மழை.. அனிமேசன் படத்துடன் நாசா அதிர்ச்சி தகவல்

Google Oneindia Tamil News

நியூயார்க்: தென்மேற்கு பருவமழையால் 12 நாளில் மட்டும் இந்தியா, மியான்மர். உள்பட தெற்காசிய நாடுகளில் சில இடங்கள் மிகப்பெரிய வெள்ள பாதிப்பால் சிதைந்து போய் இருப்பதாக நாசா புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாசா தனது எர்த் அப்சர்வேட்டரி பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆகஸ்ட மாதத்தில் கடந்த சில வாரங்களில் பெய்த கனமழையால் மியான்மர் (பர்மா) மற்றும் தென்னிந்தியா மற்றும் மேற்கு இந்தயா பகுதிகள் கடும் வெள்ளபாதிப்பாலும், நிலச்சரிவுகளால் சிதைந்து போய் உள்ளது. சராசரிக்கு மேல் பருவமழை பெய்ததால் ஆறுகள் மற்றும் நீரோடைகள் அவற்றின் கரைகளை தாண்டி நிரம்பி வழிகின்றன. அதேநேரம் பகுதிகளில் மலைப்பகுதிகள் சீர்குலைந்தன.

Nasa released animation pics for Heavy Monsoon Rains Flood South Asia

பொதுவாக தெற்காசியாவில் பருவமழை ஜுலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக இந்தியா தனது வருடாந்திர மழையில் 70 சதவீதத்தை தென்மேற்கு பருமழையில் இருந்து பெறுகிறது. இந்த மழைதான் இந்தியாவின் குடிநீர் விநியோகத்திற்கும், விவசாயம் செய்வதற்கு முக்கியமானது. ஆனால் இந்த பருவமழையால் ஆண்டு தோறும் பல ஆயிரம் இறப்புகள் ஏற்படுவதுடன் 15 சதவீதம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த அனிமேசன் படம் (அனிமேசன் படம் வெளியிட்டுள்ளது) கடந்த ஆகஸ்ட் 1 முதல் 12ம் தேதி வரையிலான காலத்தில் பெய்த மழை அளவுகளை சித்திரிக்கிறது. கருஞ்சிவப்பு புள்ளிகள் அதிக மழை பெய்ததை பிரதிபலிக்கின்றன. பல இங்களில் 60 சென்டிமீட்டருக்கு மேல் பெய்துள்ளது. அவற்றை இது பிரதிபலிக்கிறது. இந்த மழை அளவீடு கணக்கிடும் பணியினை நாசாவுடன் ஜப்பான் மற்றும் பல்வேறு நாடுகள் இணைந்து செய்து வருகின்றன.

ஆகஸ்ட் 9ம் தேதி மியான்மரில்(பர்மா) எற்பட்ட நிலச்சரிவு 9 பேரின் உயிரை பறித்தது. அங்கு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளபெருக்கு காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேரிடர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் எனறு ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென் மற்றும் மேற்கு மாநிலங்களான கேராள, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நூறறுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 10லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தால் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் சேதமடைந்தன. கோடைக்காலத்தில் பயிரிட்டு இருந்த பல ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் அழிந்து போயின.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி 45 சதவீதம் மழை ஆகஸ்ட் 7 முதல் 14ம் தேதிக்கு பெய்துள்ளது. அதேநேரம் ஜூன் 1 முதல் பெய்யும் தென்மேற்கு பருவமழையில் 50 சதவீதம் பெய்துள்ளது. வழக்கத்தைவிட ஒரு சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

English summary
Nasa released animation pics for Heavy Monsoon Rains Flood South Asia, In India, the worst of the flooding hit the western and southern states of Kerala, Karnataka, Maharashtra, and Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X