நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தி டிகேட் ஆப் சன்.. சூரியனின் 10 ஆண்டுகளை அழகிய வீடியோவாக்கிய நாசா.. பார்த்தா அசந்து போய்டுவீங்க!

சூரியனின் 10 ஆண்டுகால செயல்பாட்டை அழகிய வீடியோவாக வெளியிட்டுள்ளது நாசா.

Google Oneindia Tamil News

நியூயார்க்: சூரியனின் பத்து ஆண்டுகள் எப்படி இருந்தது என்பதை ஒரு மணி நேரம் ஓடும் அழகிய வீடியோவாக உருவாக்கி அசத்தியுள்ளது நாசா.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளி குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதில் சூரியனைப் பற்றிய ஆய்வும் ஒன்று. மற்ற கோள்களை ஆராய அனுப்பப்பட்டுள்ள விண்கலன்கள் மூலமாகவும், சூரியனை ஆராய்வதற்கென்று அனுப்பப்பட்ட விண்கலன் மூலமாகவும் சூரியனைப் பற்றிய பல்வேறு தகவல்களை அது பெற்று வருகிறது.

அந்தவகையில் கடந்த பத்து ஆண்டுகளில் சூரியனின் இயக்கம் எப்படியாக இருந்தது என்பது பற்றிய ஒரு மணி நேர வீடியோ ஒன்றை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் உருவாக்கியுள்ளது.

நெல்லிக் காய் ஜூஸ் தொடங்கி ப்ரூட் சாலட் வரை.. கொரோனா நோயாளிகளின் டயட்.. சொல்கிறார் டாக்டர் தீபாநெல்லிக் காய் ஜூஸ் தொடங்கி ப்ரூட் சாலட் வரை.. கொரோனா நோயாளிகளின் டயட்.. சொல்கிறார் டாக்டர் தீபா

ஒரு மணி நேர வீடியோ

சூரியனில் நடைபெற்ற பல முக்கியமான தருணங்களின் படங்களைக் கொண்டு இந்த வீடியோவை நாசா உருவாக்கியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி முதல் இந்தாண்டு (2020) ஜூன் 1ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சூரியனின் தோற்றம் எப்படியெல்லாம் இருந்துள்ளது என்பதை இந்த வீடியோ அழகாகக் காட்டுகிறது.

கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

குறிப்பாக வெள்ளி கிரகம் சூரியனை சுற்றிவருவது, சூரியனில் ஏற்பட்ட வெடிப்புகள் போன்றவையும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. கூடுதலாக அதைப் பற்றிய தகவல்களுக்காக பிரத்யேக லிங்க்குகளையும் அந்த வீடியோவில் நாசா கொடுத்துள்ளது. அதோடு, வீடியோவில் உள்ள இருண்ட பிரேம்கள் புகைப்படம் எடுத்த விண்கலத்திற்கும் சூரியனுக்கும் இடையில் பூமி அல்லது சந்திரன் சென்ற போது உருவானவை எனவும் நாசா விளக்கமளித்துள்ளது.

மாறும் காந்தப்புலம்

மாறும் காந்தப்புலம்

நாசாவின் கூற்றுப்படி, சூரியனின் காந்தப்புலம் சூரிய சுழற்சி என்று அழைக்கப்படும் ஒரு சுழற்சியின் வழியாக செல்கிறது. ஒவ்வொரு 11 வருடங்களிலும், சூரியனின் காந்தப்புலம் முழுவதுமாக மாறி விடுகிறது. அதாவது அதன் வடக்கு துருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடக்கு துருவமாகவும் மாறி விடுகிறது. அடுத்த 11 ஆண்டில் அது மீண்டும் பழையபடியே மாற்றம் அடைகிறது.

ஏ டிகேட் ஆப் சன்

ஏ டிகேட் ஆப் சன்

இது போன்ற மாற்றங்களைத் தான் நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து கண்காணித்து வந்தது. அப்போது எடுக்கப்பட்ட அதிக ரெசல்யூஷன் கொண்ட 4250 லட்சம் புகைப்படங்களைக் கொண்டு தான், ‘ஏ டிகேட் ஆப் சன்' (A decade of Sun) என்ற தலைப்பில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிய தடங்கல்

சிறிய தடங்கல்

இந்த வீடியோவிற்காக கடந்த 10 ஆண்டுகளில் 200 லட்சம் ஜிகா பைட் டேட்டா சேகரிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. ஆனால், 2016ல் சூரியனை ஆய்வு செய்த அந்த கருவியில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அந்தாண்டு சூரியனின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதில் நாசாவிற்கு சிறிய தடங்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

இந்த வீடியோவை இதுவரை ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். ‘10 ஆண்டுகளில் சூரியன் எப்படி இருந்தது என்பதை 1 மணி நேரத்திலேயே காண்பித்ததற்கு நன்றி. இது தான் உண்மையான டைம்லேப்ஸ்' என இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் நாசாவைப் பாராட்டி பதிவிட்டுவருகின்றனர்.

English summary
NASA has released a stunning 10-year time-lapse video of the Sun, condensing a decade of activity into one hour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X