நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செவ்வாயின் அதிகாலை இப்படித்தான் இருக்கும்.. நாசாவிற்கு இன்சைட் அனுப்பிய 2 வாவ் போட்டோஸ்!

செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் இரண்டு புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வெற்றிகரமாக தரை இறங்கியது இன்சைட் .. புகைப்படமும் அனுப்பியது

    நியூயார்க்: செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் இரண்டு புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பி உள்ளது.

    நாசாவின் இன்சைட் ரோபோட் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு இது வெற்றிகரமாக தரையிறங்கியது.

    இந்த இன்சைட் ரோபோட் செவ்வாயில் 2 வருடம் ஆராய்ச்சி செய்யும். செவ்வாயின் உட்பகுதியை இது ஆராய்ச்சி செய்ய உள்ளது.

    முதல் புகைப்படம்

    இந்த நிலையில் இன்சைட் செவ்வாயில் தரையிறங்கும் நேரத்தில் சரியாக முதல் புகைப்படத்தை எடுத்தது. இந்த போட்டோ இன்சைட்டின் கீழ் பகுதியில் இருக்கும் கேமரா மூலம் எடுக்கப்பட்டது. செவ்வாயில் இன்சைட் இறங்கும் போது எப்படி புழுதி பறக்கும், எப்படி காற்று வீசும், மண் எப்படி நகர்ந்து செல்லும் என்று இந்த புகைப்படம் மூலம் தெளிவாகி உள்ளது.

    சுத்தம் செய்யும்

    இந்த கேமராவை இன்சைட் இன்னும் சில நாட்களில் சுத்தம் செய்யும். செவ்வாயில் இறங்கிய போது இதில் புழுதி படிந்து இருக்கிறது. இதில் இருக்கும் கருவிகள், கேமராவை சுத்தம் செய்ய தேவையான உபகரணங்களை கொண்டு இருக்கிறது. அதை வைத்து செவ்வாயின் கிரகத்தின் புழுதியை இது கேமரா லென்ஸில் இருந்து அகற்றும். அதன்பின் செவ்வாயின் தரைப்பகுதியின் தெளிவான புகைப்படம் இன்னும் சில நாளில் அனுப்பப்படும்.

    அதிகாலை

    இதேபோல் செவ்வாயின் அதிகாலை புகைப்படம் ஒன்றையும் இன்சைட் அனுப்பி உள்ளது. 8 நிமிடம் தாமதமாக அந்த புகைப்படம் வந்தது. மெல்லிய சூரிய வெளிச்சத்தில், மனிதர்கள் யாரும் இல்லாமல், பேரமைதியுடன் இந்த புகைப்படம் பார்க்கவே அழகாக இருந்தது. இதை செவ்வாயில் இறங்கிவிட்டேன் என்றும் நாசா சந்தோசமாக டிவிட் செய்துள்ளது.

    எப்படி செய்யும்

    இந்த இன்சைட் ஒரே இடத்தில் இருந்துதான் செவ்வாயை தோண்டி ஆராய்ச்சியை செய்யும் என்பதால், குழிகளின் படம்தான் இனி அனுப்பப்படும். அதேபோல் இது தானாக சிந்திக்கும் திறன் கொண்டது என்பதால், மிக சிறப்பான புகைப்படங்களை மட்டுமே பூமிக்கு அனுப்பும் என்றும் நாசா கூறியுள்ளது. இன்சைட்டை க்யூரியாசிட்டி கூட சேர்ந்த செல்பி எடுத்து அனுப்ப சொல்லுங்க பாஸ்.. வீ ஆர் வெயிட்டிங்!

    English summary
    NASA's InSight sent two news photos from Mars today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X