நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செவ்வாயில் சரிந்தது நாசாவின் ரோபோட்.. 4 டிகிரி சாய்ந்தது இன்சைட்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் 4 டிகிரி சாய்ந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் 4 டிகிரி சாய்ந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

நாசாவின் இன்சைட் ரோபோட் கடந்த வாரம் செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த இன்சைட் ரோபோட் செவ்வாயில் 2 வருடம் ஆராய்ச்சி செய்யும்.

செவ்வாயின் உட்பகுதியை இது ஆராய்ச்சி செய்ய உள்ளது. இந்த நிலையில் இதில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செவ்வாய் புகைப்படம்

செவ்வாய் புகைப்படம்

செவ்வாயில் தரையிறங்கிய நாசாவின் இன்சைட் ரோபோட் இரண்டு புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பி உள்ளது. இன்சைட் செவ்வாயில் தரையிறங்கும் நேரத்தில் சரியாக முதல் புகைப்படத்தை எடுத்தது. இந்த போட்டோ இன்சைட்டின் கீழ் பகுதியில் இருக்கும் கேமரா மூலம் எடுக்கப்பட்டது. செவ்வாயின் அதிகாலை புகைப்படம் ஒன்றையும் இன்சைட் அனுப்பி உள்ளது.

என்ன ஆனது

என்ன ஆனது

இந்த நிலையில் இந்த இன்சைட்டில் தற்போது சிறிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது கொஞ்சமாக சாய்ந்து இருக்கிறது. இந்த இன்சைட் ரோபோட் 4 டிகிரி சரிந்து இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். நேற்று அதிகாலைதான் இந்த சரிவை கண்டுபிடித்தனர்.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இது எப்படி சரிந்தது என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இதன் நான்கு கால் பகுதிகளில் ஒரு கால் பகுதிக்கு கீழ் உள்ள தரை மோசமாக இருந்துள்ளதாகவும், அந்த பகுதி எடை தாங்காமல் வேகமாக சரிந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனாலும் கீழே உறுதியாக இருந்ததால் தொடர் சரிவு தடுக்கப்பட்டு இருக்கிறது.

பிரச்சனை இல்லை

பிரச்சனை இல்லை

ஆனால் இதனால் பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளனர். 15 டிகிரி வரை இது சரிவை தாங்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இது மேலும் சரிய வாய்ப்பில்லை என்றும், பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் கூறியுள்ளனர்.

English summary
NASA's InSight tilts a 4'O degree due to landslide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X