நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாசாவின் ரூ.5000 கோடி பட்ஜெட்டை தீர்மானிக்கும் அந்த 6.30 நிமிடம்.. செவ்வாயை நெருங்கிய இன்சைட் ரோபோ!

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பி இருக்கும் இன்சைட் ரோபோட் செவ்வாயில் தரையிறங்க 6.30 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    செவ்வாயில் இன்று கால் பதிக்கிறது இன்சைட் ரோபோட்

    நியூயார்க்: செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பி இருக்கும் இன்சைட் ரோபோட் செவ்வாயில் தரையிறங்க 6.30 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

    'உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்'' என்று அமர்க்களம் அஜித் போலத்தான் தற்போது நாசா பாடிக்கொண்டு இருக்கிறது. இப்போது நாசாவின் மொத்த உயிரும் செவ்வாய் கிரகத்தில்தான் உள்ளது.

    நாசா செவ்வாய்க்கு அனுப்பிய இன்சைட் ரோபோட் இன்று நள்ளிரவில் அங்கு தரையிறங்க உள்ளது. இன்று இரவு தரையிறங்கும் அந்த ரோபோட், மிக முக்கியமான 6 நிமிடங்களை கடக்க வேண்டி இருக்கிறது.

    செவ்வாயை நெருங்கிவிட்டது

    இந்த இன்சைட் தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து 10 மணி நேர தொலைவில் இருக்கிறது. இந்த நேரத்தை அதிகரிக்க நாசா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செவ்வாயில் இன்சைட் ரோபோவை இறக்க கூடுதலாக இரண்டு மணி நேரம் கூட ஆகலாம். ஆனால் இன்று நள்ளிரவிற்குள் கண்டிப்பாக இன்சைட் செவ்வாயில் இறக்கப்படும்.

    எங்கு இறங்குகிறது

    செவ்வாயின் வடக்கு பகுதியில்தான் இந்த ரோபோட் களமிறங்க உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் நாசா ஏற்கனவே அனுப்பி இருக்கும் க்யூரியாசிட்டி ரோவருக்கு இது பங்காளி போல கொஞ்சம் தொலைவில் தனியாக நின்று ஆராய்ச்சி செய்யும். இது செவ்வாயில் இறக்கப்படும் பகுதியின் பெயர் எல்சியம் பிலானிசியா.

    தாமதம் ஆகும்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே இன்சைட் அனுப்பும் தகவல்கள் கடக்கும் தூரம் 146 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். இதனால் இன்சைட் அனுப்பும் தகவல்கள் நாசா மையத்திற்கு வர 8 நிமிடங்கள் காலதாமதம் ஆகும். இன்சைட்டுக்கு என்ன ஆனாலும் அது 8 நிமிடத்திற்கு பின்தான் நாசாவிற்கு தெரிய வரும்.

    அந்த நிமிடங்கள்

    இந்த இன்சைட் செவ்வாயில் இறங்க எடுத்துக் கொள்ளும் நேரம் 7 நிமிடங்கள் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் சரியாக செவ்வாயில் இறங்க எடுக்கப்படும் நேரம் 6.30 நிமிடங்கள் ஆகும். அதாவது செவ்வாய்க்குள் நுழைவது, செவ்வாயில் மெதுவாக பறப்பது, கடைசியாக செவ்வாயில் இறங்குவது ஆகிய மூன்று முக்கியமான கட்டங்களை இது கடக்க வேண்டும்.

    வேகம் குறைக்கப்படும்

    இது ஏன் முக்கியம் என்றால், தற்போது இன்சைட் பல மில்லியன் வேகத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இது செவ்வாய்க்கு அருகே சென்றவுடன் வேகமும் குறைக்கப்படும். அதன்பின்தான் செவ்வாயின் வளிமண்டலத்திற்குள் கொண்டு செல்லப்படும். அப்போதுதான் இன்சைட் உடைந்து நொறுங்காமல் இருக்கும்.

    கீழே இறங்கும்

    செவ்வாயின் வளிமண்டலத்திற்குள் சென்ற பின் வேகம் இன்னும் குறைக்கப்படும். ஒரு புள்ளிக்கு மேல் மனிதர்கள் நடக்கும் வேகத்திற்கு இந்த இன்சைட் வேகத்தை குறைக்கும். அதன்பின் அதைவிட வேகம் குறைக்கப்பட்டு, பின் தரையில் இறக்கப்படும். இது மொத்தமும் நடக்க 6.30 நிமிடங்கள் ஆகும். இதை நாசா ''டெர்ரர் டைம்'' என்று அழைக்கிறது. இந்த 6.30 நிமிடங்கள்தான் நாசாவின் 5000 கோடி ரூபாய் பட்ஜெட் திட்டத்தில் மிக முக்கியமான நிமிடங்கள் ஆகும்.

    English summary
    NASA's Mars InSight: The Ultimate mission heads for '6.30 minutes of terror'.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X