நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பல லட்சம் டிகிரி வெப்பம்.. சூரியனுக்கு மிக அருகில் கெத்தாக சென்ற சாட்டிலைட்.. அசத்திய நாசா!

நாசாவின் சோலர் புரோப் சாட்டிலைட் சூரியனுக்கு மிக அருகில் சென்ற மனிதன் உருவாக்கிய கருவி என்ற சாதனையை படைத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சூரியனுக்கு மிக அருகில் சென்ற நாசாவின் சாட்டிலைட்- வீடியோ

    நியூயார்க்: நாசாவின் சோலர் புரோப் சாட்டிலைட் சூரியனுக்கு மிக அருகில் சென்ற மனிதன் உருவாக்கிய கருவி என்ற சாதனையை படைத்து இருக்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட்டை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இதன் மூலம் நாசா உலக வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியது.

    உலகில் மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிக அதிக வேகத்தில் உருவாக்கப்பட்ட விண்வெளி திட்டம் இதுதான். சோலார் காற்று குறித்து ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் பார்க்கர் நினைவாக இதற்கு பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    [செயலிழந்த ஒரு கால்.. ரயில் தண்டவாளத்தில் பெரிய விரிசல்.. 6 கிமீ ஓடி பலரின் உயிரை காப்பாற்றிய நபர்!]

    அள்ளும் வேகம்

    அள்ளும் வேகம்

    பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட் மொத்தம் ஒரு மணி நேரத்தில் 430,000 மைல்கல் தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 7 வருடம் சூரியனை ஆராயும் என்று கூறப்படுகிறது. 7 வருடமும் சூரியனை நிலையாக ஆராய்ச்சி செய்யும். இதை முழுக்க முழுக்க சாட்டிலைட் என்று சுருக்கி விட முடியாது. இது சாட்டிலைட் செய்யும் பணிகளையும் தாண்டி நிறைய பணிகளை செய்கிறது.

    எப்படி அனுப்பியது

    எப்படி அனுப்பியது

    கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி இந்த ராக்கெட் அனுப்பப்பட்டது. இதற்காக டெல்டா ஐவி என்ற பெரிய ராக்கெட்டை கண்டுபிடித்து இருக்கிறார்கள். உலகிலேயே அதிக சக்தி கொண்ட ராக்கெட் இதுதான். இதில் 4 ராக்கெட்டை வைத்து ஏவி இருக்கிறார்கள்.

     என்ன செலவு

    என்ன செலவு

    இந்திய மதிப்பில் இதற்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சூரியனின் கரோனா பகுதியை சுற்றி வர போகும் முதல் விண்கலம் இதுதான். இந்த நவம்பரில் இருந்து இது சூரியன் குறித்த ஆராய்ச்சியை தொடங்க உள்ளது.

    நெருக்கமானது

    நெருக்கமானது

    இந்த நிலையில் இந்த விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று இருக்கிறது. இதற்கு முன் சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம், சூரியனில் இருந்து 42.73 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த சாதனையை முறியடித்து நாசாவின் விண்கலம் சூரியனில் இருந்து 41 மில்லியன் தொலைவிற்கு நெருங்கி இருக்கிறது.

    இன்னும் நெருக்கமாகும்

    இன்னும் நெருக்கமாகும்

    சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக இது இன்னும் சூரியனுக்கு மிக அருகில் செல்ல உள்ளது. சூரியனில் இருந்து 6.1 மில்லியன் கிலோ மீட்டர் அருகே செல்ல இருக்கிறது. வரும் 2024ல் இந்த விண்கலம் இந்த சாதனையை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    NASA's Parker Solar Probe gets very close to Sun for the first time. It is the first ever man made object to get this closer to the Sun.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X