நைட்டு ஆனா போதும்.. விடாமல் பெய்யும் "நெருப்பு மழை".. வெலவெலத்து போன நாசா.. எங்கு தெரியுமா?
நியூயார்க்: இரவு நேரத்தில் மட்டும் நெருப்பு மழையை பொழியும் கிரகம் ஒன்றை ஆராய்ச்சி செய்ய நாசா முடிவெடுத்து இருக்கிறதாம். அது என்ன கிரகம்.. ஏன் நெருப்பு மழை பொழிகிறது என்று தெரிந்துகொள்வோம்!
இந்த பிரபஞ்சம் பல அதிசயங்களை உள்ளடக்கி உள்ளது. இப்போது வரை பிரபஞ்சம் உருவாக காரணமாக இருந்த பிக்பேங் நிகழ்வு எப்படி ஏற்பட்டது என்ற உண்மை தெரியவில்லை. அதேபோல் உலகில் வேறு கிரகங்களில் உயிரினம் இருக்கிறதா என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இது போல பிரபஞ்சத்தில் இருக்கும் மற்றகிரகங்களை , நட்சத்திரங்களை ஆராய்வதற்காகவே James Webb போன்ற தொலைநோக்கிகளை நாசா மற்றும் ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி விண்ணிற்கு அனுப்பி உள்ளது.

நெருப்பு கிரகம்
இந்த நிலையில்தான் நெருப்பு மழை பொழியும் கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. ஆம் இரவு நேரமானாலே அந்த கிரகத்தில் நெருப்பு லாவா குழம்பு மழையாக பொழிகிறதாம். இந்த கிரகம் நமது பால்வெளியில் எல்லாம் இல்லை. பூமியில் இருந்து 50 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகத்தின் பெயர் 55 கேங்க்ரி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எங்கே இருக்கிறது
இந்த கிரகம், தனது நட்சத்திரத்தில் (சூரியன்) இருந்து மிக மிக அருகில் இருக்கிறதாம். அதாவது 0.015 astronomical units தொலைவில்தான் இருக்கிறதாம். அதாவது அதன் சூரியனுக்கு - அந்த கிரகத்திற்கும் இடையில் உள்ள தூரம் வெறும் 22 லட்சம் கிலோ மீட்டர். பூமிக்கும் நமது சூரியனுக்கும் இடையில் உள்ள தோற்றம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். அப்படி என்றால் 55 கேங்க்ரி கிரகம் தனது சூரியனில் இருந்து எவ்வளவு அருகில் இருக்கிறது என்று யூகித்து கொள்ளுங்கள்.

அதிக வெப்பம்
இதனால் அந்த கிரகத்தின் வெப்பநிலை 2400 டிகிரி செல்ஸியஸ் வரை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கிரகத்தின் வளிமண்டலம் முழுக்க முழுக்க ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் மூலம் நிறைந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இந்த கிரகம் தன்னை தானே மெதுவாக சுற்றுகிறது. பகல் நேரத்தில் சூரியனை எதிர்நோக்கி இருக்கும் கிரகத்தின் பகுதியில் இருக்கும் பாறைகள் கூட உருகும் அளவிற்கு இங்கு வெப்பம் இருக்கும்.

பாறைகள் உருகும்
இதனால் பாறைகள், கற்கள் உருகி மேலே வளிமண்டலத்திற்கு செல்லும். அதே சமயம் இரவு நேரத்தில் சூரியனை எதிர்நோக்கி இல்லாத பகுதியில் உருகிய பாறைகள் மீண்டும் லேசாக திட நிலையை அடைந்து, நெருப்பு பிழம்பு போல கிரகத்தின் மீது விழும். அதாவது எரிமலையின் லாவா குழம்பு வானத்தில் இருந்து விழுவது போலவே இந்த பாறைகள் விழும் என்று நாசா கூறியுள்ளது.

நாசா மழை
இரவு நேரத்தில் தினமும் இப்படி நெருப்பு மழை அங்கு பெய்து வருகிறது. மீண்டும் மறுநாள் அந்த பாறைகள் ஆவி ஆகி.. மீண்டும் ரிப்பீட்டு என்று சொல்லும் அளவிற்கு இரவில் மறுபடியும் நெருப்பு மழை பொழிகிறதாம். இந்த நிலையில்தான் அந்த கிரகத்தை தற்போது நாசா தீவிரமாக ஆராய உள்ளது. James Webb தொலைநோக்கியின் உதவியுடன் நாசா இந்த கிரகத்தை ஆராய உள்ளது. அதோடு இந்த கிரகத்தின் ஈர்ப்பு விசை எவ்வளவு என்றும் நாசா ஆராய்ச்சி செய்ய உள்ளது.