நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேகத்தில் மிதக்கும் பாக்டீரியா.. வியக்க வைத்த வீனஸ்.. "டாவின்சி+" திட்டத்தை கையில் எடுக்கிறது நாசா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: வெள்ளி கிரகத்தில் பாக்டீரியா போன்ற உயிரினங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று கடந்த சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது நாசா தனது வெள்ளி ஆராய்ச்சியை துரிதப்படுத்தி உள்ளது. இதற்காக பல கோடிகளை செலவு செய்ய நாசா முடிவு செய்துள்ளது.

2020 இதை விட இன்னும் விசித்திரமாக மாற முடியாது என்றுதான் கூற வேண்டும்... வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்று சில நாட்களுக்கு முன் செய்தி வந்த நிலையில், நாசா முதல் ஆளாக அங்கு தனது ஆராய்ச்சி மிஷனை அனுப்ப திட்டமிட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு முன்பாக வெள்ளி கிரகத்திற்கு சென்று, அங்கு உயிரினம் உள்ளதா என்று கண்டுபிடிக்க நாசா முடிவு செய்துள்ளது.

நாசாவின் இந்த திட்டம் , இதுவரை அவர்கள் மேற்கொண்டதில் மிகப்பெரிய திட்டமாக இருக்கும் என்கிறார்கள். இதுவரை செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருக்கிறதா என்று சோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தனது போகஸை அப்படியே வெள்ளி கிரகத்திற்கு நாசா திருப்பி உள்ளது.

விவசாய மசோதா...ஷிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு... பாஜகவுடன் உறவை முறிக்க தயார் என அறிவிப்பு! விவசாய மசோதா...ஷிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு... பாஜகவுடன் உறவை முறிக்க தயார் என அறிவிப்பு!

என்ன காரணம்

என்ன காரணம்

இரண்டு நாட்களுக்கு முன் வெள்ளி கிரகத்தில் நிகழ்த்தப்பட்ட சிறிய கண்டுபிடிப்பு ஒன்றுதான் இதற்கு காரணம் ஆகும். சூரிய குடும்பத்தில் இருக்கும் வீனஸ் எனப்படும் வெள்ளி கிரகத்தில் சிறிய அளவிலான மைக்ரோப்ஸ் வகை பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஹவாய் மற்றும் சிலியில் இருக்கும் இரண்டு பெரிய தொலைநோக்கிகள் மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது . வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்தில் உயிரினம் இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

எப்படி வாழும்

எப்படி வாழும்

வெள்ளி கிரகத்தின் வெப்பநிலை என்னவோ 800 டிகிரி செல்சியஸ். அங்கு தரை பகுதியில் உயிரினங்கள் இருக்க எல்லாம் வாய்ப்பு இல்லை. அங்கு தண்ணீரும் இல்லை. ஆனால் மேலே 50 கிமீ உயரத்தில் இருக்கும் வீனஸ் வளிமண்டல மேக கூட்டங்களில் உயிரினங்கள் மிதந்தபடி செல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த வளிமண்டலம் முழுக்க முழுக்க கார்பன் டை ஆக்சைட் மற்றும் சல்பூரிக் ஆசிட் மூலம் உருவான வலிமையான மேகங்கள் கொண்ட பகுதி ஆகும்.

வெப்பநிலை குறைவு

வெப்பநிலை குறைவு

இந்த வளிமண்டலத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும். பூமியில் இருக்கும் அறை வெப்பநிலையை விட கொஞ்சம் அதிகமான வெப்பநிலை இருக்கும் என்று கூறுகிறார்கள். இங்கு உயிரினங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த வளிமண்டலத்தில் பாஸ்பீன் எனப்படும் வாயுவை ஹவாய் மற்றும் சிலியில் இருக்கும் இரண்டு பெரிய தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடித்தனர். இதுதான் இந்த உயிரினங்கள் குறித்த சந்தேகத்திற்கு காரணம்.

வாயுக்கள் எப்படி

வாயுக்கள் எப்படி

பொதுவாக இந்த பாஸ்பீன் வாயுக்கள் பாக்டீரியா இருக்கும் இடங்களில் காணப்படும், பென்குயின், சில வகை பறவைகளின் எச்சங்களில் இந்த வாயு காணப்படும். ஒரு இடத்தில் உயிரினம் இல்லை என்றால், அங்கு பாஸ்பீன் காணப்பட வாய்ப்பு இல்லை. பாஸ்பீன் ஒரு இடத்தில் இருந்தால் அங்கு கண்டிப்பாக உயிரினம் இருப்பதாக அர்த்தம். இந்த பாஸ்பீன்தான் தற்போது வெள்ளியின் வளிமண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் அங்கு பாக்டீரியா போன்ற உயிரினம் இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு காரணம் ஆகும்.

நாசா என்ன

நாசா என்ன

இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுக்க ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான் தற்போது திடீரென வெள்ளி கிரகத்திற்கு ''வெள்ளி மலரே, வெள்ளி மலரே'' என்று பாட்டு பாடியபடி நாசா செல்ல தொடங்கி உள்ளது. ஆம், நாசா இத்தனை நாட்கள் அனுமதி கொடுக்காமல் இருந்த டாவின்சி திட்டத்திற்கு தற்போது கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது.

டாவின்சி எப்படி

டாவின்சி எப்படி

இதற்காக டாவின்சி + (DAVINCI+) திட்டம் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக வெள்ளி கிரகத்திற்கு நாசா தனது சின்ன ரோவர் மற்றும் ஆர்பிட்டர் ஒன்றை அனுப்ப உள்ளது. 2015ல் இந்த திட்டம் போடப்பட்டு நாசா மூலம் அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது . ஆனால் தற்போது நாசா இந்த திட்டத்தை அனுமதிக்க உள்ளது. அடுத்த வருடம் தொடக்கத்தில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கவில்லை

அனுமதிக்கவில்லை

இந்த திட்டத்தை நாசா 2015ல் போட்டாலும், வீனஸ் மீது பெரிய நம்பிக்கை இல்லாத காரணத்தால் அதை அனுமதிக்காமலிருந்தது. ஆனால் தற்போது அங்கே பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது என்பதால், மீண்டும் அந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இன்னொரு பக்கம் ரஷ்யா, வீனஸ் கிரகமே எங்களுக்கு சொந்தம் என்று கூற தொடங்கி உள்ளது. இதனால் விண்வெளியில் வீனஸ் கிரகத்தை பிடிக்க புதிய போட்டி ஏற்பட்டுள்ளது .

மாஸ் பிளான்

மாஸ் பிளான்

அடுத்த வருட இறுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்த நாசா யோசித்து வருகிறது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியாரின் உதவியை கண்டிப்பாக நாசா நாடும் என்கிறார்கள். வெள்ளியில் உயிரினம் இருந்தாலும், அங்கே மனிதர்கள் சென்று வாழ்வது கடினம். ஆனால் அங்கு இருக்கும் சின்ன சின்ன பாக்டீரியாக்கள் உயிரினங்கள் எப்படி தோன்றியது என்பதற்கான விடைகளை கொண்டு இருக்க வாய்ப்புள்ளது.

English summary
Nasa to start its Davinci+ mission to research on possible life form in Venus, after the finding of Phosphine
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X