நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செவ்வாயை ஆராயும் மார்ஸ் 2020 ரோவர்.. அணு சக்தியில் இயங்கும் ரோபோ.. மாஸாக அறிமுகப்படுத்திய நாசா!

நாசா இந்த வருடம் செவ்வாய் கிரகத்திற்கு அதிக சக்தி வாய்ந்த ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வ்வாயை ஆராயும் மார்ஸ் 2020 ரோவர்... நாசா அசத்தல்

    நியூயார்க்: நாசா இந்த வருடம் செவ்வாய் கிரகத்திற்கு அதிக சக்தி வாய்ந்த ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. இதற்கான அறிமுக விழா நாசா தலைமையகத்தில் அமெரிக்காவில் நடைபெற்றது.

    செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அங்கு நாசா நிறைய ரோவர்களை அனுப்பி உள்ளது. 2003 ஜூன் மாதம் அனுப்பப்பட்டு, 2004 ஜனவரி மாதம் ஆப்பர்ச்சுனிட்டி (Opportunity) ரோவர் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது. இது மனித வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

    இந்த வெற்றியை மக்கள் அந்த ரோவர் தரையிறங்கிய போதே பெரிய அளவில் கொண்டாடினார்கள். 2004லிலேயே நாசா இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தியது பலருக்கும் ஆச்சர்யத்தை தந்தது.

    மானியம் இல்லா சமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு.. 5வது மாதமாக விலைவாசி ஏறுமுகம் மானியம் இல்லா சமையல் எரிவாயு விலை இன்று முதல் அதிகரிப்பு.. 5வது மாதமாக விலைவாசி ஏறுமுகம்

    அடுத்து என்ன

    அடுத்து என்ன

    அடுத்து நாசா செவ்வாய் கிரகத்திற்கு க்யூரியாசிட்டி ரோவரை அனுப்பியது. அதுவும் சரியாக இறங்கி செவ்வாயில் ஆராய்ச்சி செய்தது. இதை அடுத்து செவ்வாயை ஆராய வரிசையாக ரோவர்களை உருவாக்கியது நாசா. மற்ற நாடுகளும் இந்த முயற்சியில் இறங்கியது.

    என்ன செய்கிறார்

    என்ன செய்கிறார்

    நாசா இந்த வருடம் செவ்வாய் கிரகத்திற்கு அதிக சக்தி வாய்ந்த ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. இதற்கான அறிமுக விழா நாசா தலைமையகத்தில் அமெரிக்காவில் நடைபெற்றது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உருவாக்கப்பட்டது. இதன் முதல் டெஸ்ட் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

    எப்போது ஏவுகிறார்கள்

    எப்போது ஏவுகிறார்கள்

    நாசா விஞ்ஞானிகள் இதை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர். ஜூலை மாதம் 17ம் தேதி இந்த வருடம் இந்த ரோவர் ஏவப்படுகிறது. இதற்கு மார்ஸ் 2020 ரோவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. செவ்வாயில் இறங்கும் நாசாவின் ஐந்தாவது ரோவர் ஆகும் இது.

    நோக்கம் என்ன

    நோக்கம் என்ன

    2026ல் செவ்வாய் கிரகத்திற்கு நாசா மனிதர்களை அனுப்புகிறது. அதற்காக செவ்வாயில் இருக்கும் வாழ்வியல் கூறுகளை ஆராய வேண்டும் என்று நாசா இந்த முடிவை எடுத்துள்ளது. செவ்வாயின் வரலாறு மற்றும் அங்கு மனிதர்கள் வாழ முடியுமா என்பதை இந்த ரோவர் ஆராய்ச்சி செய்யும்.

    என்ன சிறப்பு

    என்ன சிறப்பு

    இதில் மொத்தம் 23 கேமராக்கள் இருக்கும். இதன் மூலம் இந்த ஆராய்ச்சி நடக்கும். அதேபோல் லேசர் சென்சார்கள் இருக்கும். இது கெமிக்கல் ஆராய்ச்சிகளையும் செய்யும். இது பெரிய கார் அளவில் இருக்கும். மொத்தம் 6 டயர்கள் இருக்கும்.இதனால் இது மிகவும் உறுதியானது ஆகும்.

    அணு

    அணு

    அதேபோல் இதில் சிறிய அணு சக்தி கருவி உள்ளது. இதனால் அதேவே மின்சாரம் தயாரித்து எரிபொருள் இல்லாமல் பயணம் செய்யும். ஒரு நாளைக்கு செவ்வாயிலில் இது 180 மீட்டர் மட்டுமே செல்லும். இதன் அறிமுகம் உலக நாடுகளை பெரிய ஆச்சர்யத்திற்கு உள்ளாகி உள்ளது.

    English summary
    NASA unveils Mars 2020 rover: All you set to launch on July 17 this year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X