நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏலியன்கள், யுஎப்ஓ பற்றி பகீர் ஆதாரம்.. பொதுவில் வெளியிட பென்டகன் முடிவு.. அமெரிக்காவில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஏலியன்கள், பறக்கும் தட்டுகள் பற்றி முக்கிய அறிவிப்பு ஒன்றை பொதுவில் அறிவிக்க அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் முடிவு செய்துள்ளது.

Recommended Video

    Aliens, UFO பொதுவில் வெளியிட Pentagon முடிவு

    ஏலியன்கள் பயன்படுத்தும் வாகனங்கள் என்று நம்பப்படும் பறக்கும் தட்டுகள் குறித்து கடந்த சில வாரங்கள் முன் அமெரிக்கா அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் முதல்முறையாக அதிகாரபூர்வமாக யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) வகை விமானங்களின் வீடியோக்களை வெளியிட்டது.

    பல வருடமாக யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்து நிறைய வதந்திகளும், சந்தேகங்களும் நிலவி வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக பென்டகன் அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு, யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு)உண்மையாக இருக்கலாம் என்று கூறி பீதி கிளப்பியது.

    லடாக்கில் மீண்டும் சீனா முரண்டு.. பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் இந்தியா.. இனி என்ன நடக்கும்! லடாக்கில் மீண்டும் சீனா முரண்டு.. பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் இந்தியா.. இனி என்ன நடக்கும்!

    அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

    இதுவரை எந்த நாட்டு அரசும் இது போன்ற வீடியோக்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டது கிடையாது. ஆனால் முதல் முறையாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரபூர்வமாக யுஎஃப்ஓ வகை விமானங்களின் வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு சாதனம் கருப்பு நிறத்தில் சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிக மெதுவாக செல்லும் இந்த சாதனம் சில நிமிடத்தில் மிக வேகமாக பறந்து மறைந்துள்ளது.

    என்ன திருப்பம்

    என்ன திருப்பம்

    இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தற்போது இதில் மேலும் புதிய தகவலை அதிகாரபூர்வமாக பென்டகன் வெளியிட உள்ளது . ஏலியன்கள் குறித்து தாங்கள் செய்த ஆராய்ச்சிகளையும், யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்து நிகழ்த்திய கண்டுபிடிப்புகளையும் பொதுவில் வெளியிட பென்டகன் முடிவு செய்துள்ளது. என்ன மாதிரியான கண்டுபிடிப்புகளை பென்டகன் வெளியிட போகிறது என்ற பீதி தற்போது ஏற்பட்டுள்ளது.

    யார் தெரிவித்தது

    யார் தெரிவித்தது

    ஏலியன்கள் குறித்து ஆராய்ச்சி செய்தவரும், பென்டகனில் ஏலியன் ஆராய்ச்சி குழுவில் பணியாற்றியவருமான எரிக் டேவிஸ் இதை உறுதி செய்துள்ளார். அதில், யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) குறித்து பென்டகன் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட போகிறது. பூமிக்கு அப்பாற்பட்ட சில விஷயங்கள் இருக்கிறது. பூமியில் உருவாக்கப்படாத சில விஷயங்களை பென்டகன் கண்டுபிடித்துள்ளது.

    யார்?

    யார்?

    இந்த விஷயங்கள், பொருட்களை மனிதர்கள் உருவாக்கவில்லை. பூமிக்கு வெளியே யாரோ உருவாக்கி உள்ளனர்.இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.தற்போது அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இந்த பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறது. 2019 வரை செயல்பட்டு வந்த யுஎஃப்ஓ (பறக்கும் தட்டு) அதிரடி படை எனப்படும் "Unidentified Aerial Phenomenon Task Force" மூலமும் இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

    பொருட்கள்

    பொருட்கள்

    இதில் பூமியில் உருவாகாத பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். பென்டகன் இதை பொதுவில் அறிவிக்க உள்ளது. 2007ல் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட இருக்கிறோம், என்று அவர் அறிவித்துள்ளார். முன்னாள் செனட்டர் ஹாரி ரெய்டு, செனட்டர்கள் மார்கோ ரூபியோ, சிபிஎஸ் மியாமி ஆகியோர் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். ஆனால் என்ன மாதிரியான அறிவிப்புகளை பென்டகன் வெளியிடும் என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை.

    English summary
    New information will come out soon on UFO and alien says Pentagon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X