நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்பாக்ஸ்ல பேசுனது கூட அவங்களுக்கு தெரியும்.. 10 கோடி பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் ஆனது.. அதிர்ச்சி!

ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு ஒரே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு ஒரே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் இது எந்த நாடு என்று விளக்கம் அளிக்கப்படவில்லை.

இரண்டு வாரம் முன் பேஸ்புக்கில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 9 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கு விவரம் ஹேக் செய்யப்பட்டது. இதை யார் செய்தது என்று தகவல் வெளியாகவில்லை.

இதை தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் ஒரே நேரத்தில் 220 கோடி மக்களின் பேஸ்புக் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் செய்ய சொன்னது. இந்த பிரச்சனை தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

எப்படி தொடங்கியது

எப்படி தொடங்கியது

சென்று வருடம் பேஸ்புக்கில் ''வியூ அஸ்'' என்ற வசதி கொண்டு வரப்பட்டது. ஆனால் இது சில நாட்களுக்கு முன்தான் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், நம்முடைய பேஸ்புக் கணக்கை, வேறு ஒருவர் எப்படி பார்க்கிறார் என்று பார்க்கும் வசதியை கொண்டு வந்தது. இந்த வியூ அஸ் வசதியை வைத்துக் கொண்டு பலருடைய பேஸ்புக் கணக்குகளை ஹேக்கர் திருடி இருக்கிறார்கள். அதில் இருந்த குறைப்பாட்டை வைத்து ஹேக் செய்துள்ளனர்.

வரிசையாக சென்றார்கள்

வரிசையாக சென்றார்கள்

முதலில் ஒரு 40 அக்கவுண்டை மட்டுமே அவர்கள் ஹேக் செய்து இருக்கிறார்கள். அதை வைத்து அவர்களின் நண்பர்களின் நண்பர் என்று வரிசையாக நூல்பிடித்து சென்று ஹேக் செய்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 9 கோடி மக்களின் பேஸ்புக் விவரம் திருடு போய் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எதை எல்லா எடுத்தனர்

எதை எல்லா எடுத்தனர்

இவர்கள் எடுத்த தகவல்கள் என்றால் நம்முடைய போன் நம்பர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள். நாம் யாரை காதலிக்கிறோம். நாம் எங்கு சாப்பிடுகிறோம். எங்கு அதிகமாக செல்கிறோம். நம்முடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை மட்டும் எடுத்து இருக்கிறார்கள்.

முக்கியமாக

முக்கியமாக

முக்கியமாக பேஸ்புக்கில் நாம் ஷேர் செய்யும் விஷயங்களைதான் அவர்கள் திருடி இருக்கிறார்கள். நாம் ஒரு பெண்ணுடன் பேசுவது, நாம் ரகசியமாக பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள், இன்பாக்ஸ் பேச்சு உள்ளிட்டவைகளை மட்டும் திருடி உள்ளனர். இந்த தகவல்களை குறி வைத்துதான் அவர்கள் இந்த ஹேக்கிங்கை செய்துள்ளனர்.

அதை மட்டும் செய்யவில்லை

அதை மட்டும் செய்யவில்லை

ஆனால் அனைத்தும் செய்த அவர்கள் அக்கவுண்டை மட்டும் முடக்கவில்லை. அதாவது பாஸ்வேர்ட்டை மொத்தமாக திருடி, அக்கவுண்டை அவர்கள் நினைத்து இருந்தால் முடக்கி இருக்க முடியும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. அவர்களுக்கு அக்கவுண்டை ஹேக் செய்வது நோக்கம் அல்ல, இதுபோன்ற தகவல்களை திருடுவது மட்டுமே நோக்கம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

English summary
New shocking updates on Data Breach of Facebook which lead the Social media giant to asks 220 crore people to re-login their account.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X