நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீப்பிடித்த வீடு.. 16வது மாடியில் சிக்கிகொண்ட பெண்.. மாற்றி யோசித்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீ விபத்தில் சிக்கிய பெண்ணை, வித்தியாசமான முறையில் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீ விபத்தில் சிக்கி 16வது மாடியில் தவித்த பெண்ணை, வித்தியாசமான முறையில் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நியூயார்க்கின் ஹெல்மெர் பகுதியில் லெநாக்ஸ் அவென்யூ எனும் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 16வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நியூயார்க் நகர தீயணைப்பு துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் ஒரு பெண் இருப்பது தெரியவந்தது. அந்த பெண் ஜன்னல் வழியாக வெளியேறி, தடுப்பு சுவரில் நின்று உதவிக்காக கதறினார்.

New York fire fighter rescues woman using Roof-Rope Rescue

இதைப்பார்த்த தீயணைப்பு வீரர்கள் மாற்று வழியில் அந்த பெண்ணை காப்பாற்ற முடிவு செய்தனர். பிரைன் குவின் எனும் வீரர் 17வது மாடியில் இருந்து கயிறு மூலம் கீழிறங்கி 16வது மாடியில் இருந்த பெண்ணை பத்திரமாக பிடித்தக்கொண்டார். பிரைனின் கயிறை சக வீரர்கள் பத்திரமாக பிடித்துக்கொண்டனர்.

அதேசமயத்தில் ராட்சச தீயணைப்பு எந்திரம் ஒன்று அந்த பெண்ணின் வீட்டில் தண்ணீரை பீய்ச்சி அடித்தது. இதனால் சிறிது நேரத்தில் தீ அணைந்தது. அதை உறுதி செய்த பிரைன், அந்த பெண்ணை கீழே உள்ள வீட்டில் இறக்காமல், அவரது வீட்டிலேயே இறக்கி விட்டார்.

புதிய கல்வி கொள்கை... ஆளுநரிடம் கருத்து கேட்க திமுக எதிர்ப்பு! தமிழக வல்லுநர் குழுவை மாற்ற கோரிக்கை புதிய கல்வி கொள்கை... ஆளுநரிடம் கருத்து கேட்க திமுக எதிர்ப்பு! தமிழக வல்லுநர் குழுவை மாற்ற கோரிக்கை

நியூயார்க் நகர தீயணைப்பு துறையினரின் இந்த வீரதீரமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். தங்களுடைய உயிரை பற்றி கவலைபடாமல், ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் பிரைனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

English summary
In Herlam, New york a team of fire fighters rescued a woman who got struck in a burning house at 16 floor of a aparttment using a rare technique called Roof-Rope Rescue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X