நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நியூயார்க்கில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்.. செப்டம்பர் 11 தாக்குதலை கண்முன் நிறுத்தும் சோகம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்த தாக்குதலின் போது எத்தனை உயிர்கள் பலியானதோ அந்த அளவுக்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நெருங்கியுள்ளது அந்நகர மக்களிடையே கவலையடைய செய்துள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸால் ஒன்றிணைந்த அமெரிக்கா - ரஷ்யா

    கொரோனாவால் எந்த இடத்தில் அதிகளவிலான பாதிப்புகள் இருக்கிறதோ அதை நோய் பரப்பும் மையம் என அழைக்கிறோம். அந்த வகையில் அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இங்கு பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தோரில் 25 சதவீதம் பேர் நியூயார்க் நகரை சேர்ந்தவர்கள் ஆவர்.

     சென்னையில் 81 பேருக்கு கொரோனா.. எந்தெந்த ஏரியாக்களில் வைரஸ் பாதிப்பு.. முழு விவரம் இதோ.. சென்னையில் 81 பேருக்கு கொரோனா.. எந்தெந்த ஏரியாக்களில் வைரஸ் பாதிப்பு.. முழு விவரம் இதோ..

    24 மணி நேரத்தில்

    24 மணி நேரத்தில்

    இதுகுறித்து நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ கூறுகையில் அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கையில் 25 சதவீதம் இறப்பு நியூயார்க்கில் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 562 பேர் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை நியூயார்க்கில் மட்டும் 2,935 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ பணியாளர்கள், செயற்கை சுவாசக் கருவிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    வருத்தம்

    வருத்தம்

    அதை அரசு பூர்த்தி செய்ய வேண்டும். வரும் வாரங்களில் 1000 செவிலியர்களும் 150 மருத்துவர்களும், 300 செயற்கை சுவாச தெரபி கொடுப்போரும் தேவைப்படுகிறார்கள். அடுத்த வாரத்தில் 3000 செயற்கை சுவாசக் கருவிகள் வர இருக்கின்றன. மக்கள் உறவினர்கள் யாருமின்றி தனியாக இறக்கின்றனர். இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

    பலன்கள்

    பலன்கள்

    அமெரிக்காவில் கடந்த மாதம் 7 லட்சம் பேர் வேலையை துறந்தனர். பணியில்லா பலன்களை பெற 10 மில்லியன் தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். மக்கள் நாளுக்கு நாள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றார். நியூயார்க்கில் பலி எண்ணிக்கை 2,935 ஆக உள்ளதை பார்க்கும் போது கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நியூயார்கில் வர்த்தக மையம் மீதான தாக்குதலே நினைவுக்கு வருகிறது.

    நியூயார்க்

    நியூயார்க்

    கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் வர்த்தக மையத்தின் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2,977 பேர் பலியாகிவிட்டனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலால் 10 பில்லியன் டாலர் பொதுச் சொத்து சேதமடைந்தது. ஒரு தீவிரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை எப்படியிருக்குமோ அந்த அளவுக்கு கொரோனா பலி இருக்கிறது. இதை எண்ணி அமெரிக்கர்கள் சோகமடைந்துள்ளனர்.

    English summary
    Newyork's coronavirus death toll nears September 11 attacks in the year 2001.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X