நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமலா-வை "கம்மா...லா" என்ற செய்தி வாசிப்பாளர்.. டக்கரை ‘டூக்கர்’ ஆக்கிய நெட்டிசன்கள்.. பழிக்கு பழி!

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பெயரை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் தவறாக உச்சரித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பெயரை தவறாக உச்சரித்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டனர்.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக நேற்று அறிவித்தார். இந்திய வம்சாவழியை சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது ஒரு வரலாற்று தருணமாக பார்க்கப்படுகிறது. எனவே உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களை நேற்று காமலா ஹாரிஸ் தான் ஆக்கிரமித்துக்கொண்டார்.

News anchor mispronounces Kamal Harris name

அந்த வகையில் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான பாக்ஸ் டிவியில் கமலா ஹாரிஸ் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டன. அப்போது அத்தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் டக்கர் கார்ல்சன், கமலாவின் பெயரின் தவறாக உச்சரித்தார்.

அவரது உச்சரிப்பு சரியானது அல்ல என்பதை தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற அமெரிக்க அரசியல் விமர்சகர் குட்ஸ்டின் என்பவர் குறிப்பிட்டார். "நீங்கள் கமலா என்று சொல்லாமல் 'கம்மா...லா' என்பது போல் உச்சரிக்கிறீர்கள்" எனக் கூறி சரி செய்ய முயன்றார்.

இதனால் கோபமடைந்த டக்கர், "எந்த உள்நோக்கமும் இல்லாமல் கமலாவின் பெயரை தவறாக உச்சரிப்பதால் என்னவாகிவிடப் போகிறது?", என்று கூறி மீண்டும் பலமுறை "கம்மா...லா", என்றே உச்சரித்தார். "துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும்", என ரிச்சர்ட் கூறியும், டக்கர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

ஜோ...கமலா ஹாரிஸ்...அனல் பறக்கும் முதல் தேர்தல் பிரச்சாரம்...ட்ரம்ப் ஒரு இடதுசாரி வெறியாளர்!! ஜோ...கமலா ஹாரிஸ்...அனல் பறக்கும் முதல் தேர்தல் பிரச்சாரம்...ட்ரம்ப் ஒரு இடதுசாரி வெறியாளர்!!

இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன. கமலாவின் பெயரை தவறாக உச்சரித்த டக்கரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டனர். டக்கரின் பெயரை டூக்கர் என்று மாற்றி அழைத்து பலர் கேலி செய்தனர். டக்கரின் செயலுக்கு நெட்சன்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    Kamala Harris-க்கு Trump பயப்பட காரணங்கள் | Oneindia Tamil

    English summary
    A video of Fox News host Tucker Carlson mispronouncing American vice president candidate of Democratic party, Kamal Harris's name has left many upset.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X