நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசின் சலுகைகளை பெற்றால் நோ குடியுரிமை.. டிரம்ப் ஷாக்கிங் அறிவிப்பு.. பலகோடி பேருக்கு செக்!

அமெரிக்க அரசின் சலுகை திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டு மக்கள் அந்நாட்டில் குடியுரிமை பெற முடியாது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    No green card for immigrants | அரசின் சலுகைகளை பெற்றால் குடியுரிமை இல்லை. டிரம்ப் அறிவிப்பு- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்க அரசின் சலுகை திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டு மக்கள் அந்நாட்டில் குடியுரிமை பெற முடியாது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய விதியால் அந்நாட்டில் பல கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அந்நாட்டில் குடியேறும் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் மக்கள் அமெரிக்காவின் உரிமைகளை பறித்து வருகிறார்கள் என்று கூறி வருகிறார்.

    இதற்காக ஏற்கனவே இந்தியர்களை குறி வைத்து எச்ஒன்பி விசாவில் நிறைய விதிமுறைகளை மாற்றினார். இது போக தற்போது குறைந்த வருமானத்தில் பணிக்கு சேரும் வெளிநாட்டு மக்களை குறி வைத்துள்ளார்.

    மீண்டும் சிக்கலில் அதிமுக... 2 பதவிக்கு செம அடிதடியாம்.. முட்டி மோதும் எம்எல்ஏக்கள்! மீண்டும் சிக்கலில் அதிமுக... 2 பதவிக்கு செம அடிதடியாம்.. முட்டி மோதும் எம்எல்ஏக்கள்!

    எப்படி

    எப்படி

    அமெரிக்காவில் லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் முறைபடியும், அரசுக்கு தெரியாமலும் குடியேறி வருகிறார்கள். அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் மெக்சிகோ உள்ளிட்ட ஏழ்மையான நாடுகளை சேர்ந்த பலர் அமெரிக்காவில் குடியேறி வருகிறார்கள். இவர்கள் அமெரிக்காவில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்

    அரசு

    அரசு

    இவர்கள் தங்களுக்கு சம்பளம் குறைவு என்பதால், அரசு அளிக்கும் நலத்திட்டங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது மெடிக்கல் இன்சூரன்ஸ், அரசின் கல்வி இன்சூரன்ஸ், அரசின் உணவு அட்டைகளை பயன்படுத்துகிறார்கள். தங்களது சம்பளம் குறைவு என்பதால் அந்நாட்டில் குடியேறிகள் பலர் இப்படித்தான் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

    என்ன மாற்றம்

    என்ன மாற்றம்

    இந்த நிலையில் அமெரிக்காவில் இனி அரசின் சலுகை திட்டங்களை பயன்படுத்தும் வெளிநாட்டு மக்கள் குடியுரிமை பெற முடியாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேபோல் அவர்கள் கிரீன் கார்டும் பெற முடியாது. அமெரிக்காவில் குடியேற ஆசைப்பட்டால் நல்ல திறமையும் , சம்பளமும் இருந்தால் மட்டும்தான் முடியும்.

    முடியாது

    முடியாது

    அரசு சலுகையில் வாழும் அளவிற்கு குறைவான சம்பளமும் திறமையும் இருந்தால் கண்டிப்பாக குடியுரிமை கிடைக்காது என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்க மக்களின் வாய்ப்புகள் தடுக்கப்படுவதை காக்க இப்படி விதிமுறை கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

    ஏன் மோசம்

    ஏன் மோசம்

    இதனால் 22 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 10.5 மில்லியன் புதிய குடியேறிகள் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் எல்லோரும் அமெரிக்காவில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், அரசின் உதவியை பெற்றால் குடியுரிமை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    No Green Card, Citizenship To Immigrants those who use Government benefits says, Trump.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X