நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் ரத்தாகிறது கிரீன் கார்ட் முறை.. வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்.. டிரம்ப் அதிரடி!

அமெரிக்காவில் கிரீன் கார்ட் முறையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பில்ட் அமெரிக்கா கார்ட் முறையை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    No More Green Card : வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்.. டிரம்ப் அதிரடி!- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவில் கிரீன் கார்ட் முறையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பில்ட் அமெரிக்கா கார்ட் (build america) முறையை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்து இருக்கிறார்.

    அமெரிக்காவில் கிரீன் கார்ட் என்ற முறை தற்போது அமலில் உள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து வேலை பார்க்கவும், அங்கேயே வசிக்கவும் இது உதவும். இது ஒரு காலவரம்பற்ற விசா போன்றது. கிரீன் கார்ட் கொண்டவர்கள் ஐந்து வருடம் அமெரிக்காவில் வசித்தால் அவர்களால் அங்கு குடியுரிமை பெற முடியும்.

    No More Green Card: Trump introduces Build America system for immigrants

    ஆனால் இந்த குடியுரிமை பெரும்பாலும் தகுதியின் அடிப்படையில் கிடைப்பது கிடையாது. அமெரிக்காவில் வசிக்கும் காலம் , அங்கு வசிக்கும் உறவினர்கள், அவர்களின் இனக்குழு சார்ந்த வாழ்க்கை முறை என்று பல்வேறு விஷயங்களை அடிப்படையாக வைத்து அங்கு குடியுரிமை வழங்கபடுகிறது.

    மொத்தமாக 1 வருடத்தில் 1 மில்லியன் மக்களுக்கு அங்கு கிரீன் கார்ட் அளிக்கப்படுகிறது. ஆனால் இதில் 88 சதவிகிதம் பேர் திறமையின் அடிப்படையின் கிரீன் கார்ட் பெறுவது கிடையாது. வெறும் 12 சதவிகிதம் பேர்தான் திறமையின் அடிப்படையில் கிரீன் கார்ட் பெறுகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த முறையை மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். கிரீன் கார்ட் முறையை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக பில்ட் அமெரிக்கா கார்ட் முறையை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்து இருக்கிறார்.

    வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் டிரம்ப் இதுகுறித்து பேசினார். அதன்படி அமெரிக்காவில் குடியேறுவது இனி எளிது. நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அமெரிக்காவில் உங்களால் பணியாற்ற முடியும். ஆனால் உங்களுக்கு திறமை இருக்க வேண்டும்.

    அமெரிக்காகாரன் அடிக்க வர்றான்.. ஓடி வாங்கடா பசங்களா.. தீவிரவாதிகளுக்கு ஈரான் ரகசிய அழைப்பு! அமெரிக்காகாரன் அடிக்க வர்றான்.. ஓடி வாங்கடா பசங்களா.. தீவிரவாதிகளுக்கு ஈரான் ரகசிய அழைப்பு!

    இனி திறமை இருந்தும் அமெரிக்காவில் குடியேற முடியவில்லையே என்று மக்கள் வருத்தம் கொள்ள வேண்டியது கிடையாது. நல்ல தகுதி கொண்டவர்கள் எளிதாக அமெரிக்கா வர முடியும். இதற்கான தேர்வு முறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த தேர்வுகள் மிகவும் வெளிப்படை தன்மையுடன் இருக்கும்படி நடக்கும். இதனால் அனைவரும் எளிதாக அமெரிக்காவில் குடியேற முடியும்.

    ஒரு வருடத்தில் எத்தனை கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டு வந்ததோ அதே அளவிற்குத்தான் இனி பில்ட் அமெரிக்கா கார்ட் (build america) வழங்கப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.

    ஆனால் திறமையற்ற நபர்களுக்கு பதிலாக திறமையான நபர்கள் அமெரிக்காவில் குடியேற முடியும். அதே சமயம் இந்த புதிய திட்டத்தை அந்நாட்டில் பலர் எதிர்த்து இருக்கிறார்கள். இது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எதிராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    English summary
    No More Green Card: The US president Trump introduces Build America system for immigrants.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X