நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க போனை ஹேக் செய்யவில்லை.. என்னை நம்புங்கள்.. அமேசான் அதிபருக்கு மெசேஜ் செய்த சவுதி சல்மான்!

உங்கள் போனை நாங்கள் ஹேக் செய்யவில்லை, பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸிடம் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: உங்கள் போனை நாங்கள் ஹேக் செய்யவில்லை, பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸிடம் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்துள்ளார்.

அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் போனை வாட்ஸ் ஆப் மூலம் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்தது அம்பலம் ஆகியுள்ளது. அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்க்டன் போஸ்டில் வெளியான கட்டுரைகளுக்கு பழி வாங்கும் விதமாக இந்த ஹேக்கிங் நடந்ததாக கூறப்படுகிறது.

அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸின் சில அந்தரங்கள் புகைப்படங்கள் இதன் மூலம் கடந்த வருடம் வெளியானது. இந்த புகைப்படங்களால்தான் அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் மற்றும் அவரது மனைவிக்கு இடையில் கடந்த வருடம் விவாகரத்தும் ஏற்பட்டது.

கண்டுபிடித்தனர்

கண்டுபிடித்தனர்

கடந்த வருடம் ஜெப் பெஸோஸ், கெவின் டி பெக்கர் என்ற பிரபல துப்பறியும் நிபுணரை அழைத்து, இந்த புகைப்படங்கள் லீக் ஆனது எப்படி என்று விசாரிக்க சொன்னார். கடந்த ஒரு வருடமாக இந்த விசாரணை நடந்து வந்தது. இதில்தான் தற்போது திடுக்கிடும் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. அதில் ஜெப் பெஸோஸ் செல்போனை சவுதி அரசு ஹேக் செய்து இருக்கிறது. முகமது பின் சல்மானின் நேரடி கண்காணிப்பில் இந்த ஹேக் நடந்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் கட்டுரைகளுக்கு பதிலடியாக இந்த ஹேக் நடந்துள்ளது, என்று நிரூபணம் ஆகியுள்ளது.

ஐநா வரை கொண்டு செல்ல முடிவு

ஐநா வரை கொண்டு செல்ல முடிவு

இந்த நிலையில், இந்த பிரச்சனையை ஐநா வரை கொண்டு செல்ல அமேசான் முடிவு செய்துள்ளது. ஆம், அமேசானின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் இது தொடார்பாக அமெரிக்க செனட் உறுப்பினர்கள் உடன் பேசி வருகிறார். அதேபோல் ஐநாவில் இருக்கும் சில முக்கியமான நபர்களும் இந்த பிரச்னையை கவனித்து வருகிறார்கள். விரைவில் ஐநாவில் இந்த பிரச்சனை எழுப்பப்படும். சவுதிக்கு இது பெரிய சிக்கலாக மாறும் என்று கூறுகிறார்கள்.

சவுதி மறுப்பு

சவுதி மறுப்பு

இந்த புகாரை சவுதி மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. நாங்கள் இதை செய்யவில்லை. கொஞ்சம் கூட அடிப்படை ஆதாரமற்ற புகார் இது. அமேசான் அதிபரை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும். எங்கள் மீது தேவையில்லாமல் சிலர் புகார் வைக்கிறார்கள். சவுதிக்கு எதிராக பின்னப்படும் சதி வலை இது. இதை நாங்கள் முறையாக எதிர்கொள்வோம் என்று சவுதி தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் மறுப்பு

வாட்ஸ் ஆப் மறுப்பு

அதேபோல் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானும் இதை மருத்துள்ளளார். இது தொடர்பாக முகமது பின் சல்மான் நேரடியாக அமேசான் அதிபர் ஜெப் பெஸோசுக்கு வாட்ஸ் ஆப் செய்துள்ளார். அதில், ஜெப் உங்கள் மீது எங்களுக்கு கோபம் எதுவும் இல்லை. உங்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும். அந்த செய்தி எதுவும் உண்மை கிடையாது. தவறான செய்திகளை பலர் பரப்பி வருகிறார்கள்.

தவறான செய்தி

தவறான செய்தி

பல நாட்களாக இந்த வதந்தியை பரப்பி வருகிறார்கள். உங்களுக்கு உண்மை தெரியும். உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உனக்கே தெரியும். சவுதி அரசு அதிகாரிகள் யாரும் அமேசான் மீது கோபத்தில் இல்லை. இந்த செய்திகளை நீங்கள் நம்ப வேண்டாம். உங்களிடம் இது தொடர்பாக விரிவாக பேசுகிறேன் என்று சல்மான் அமேசான் அதிபரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

English summary
No, we didn't hack your phone says Saudi Salmon to Amazon Jeff Bezos through Whats App .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X