நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த ‘கவசம்’ எதுக்கு கண்டுபிடிச்சிருக்காங்கனே தெரியல.. ஆனாலும் மக்கள் வாங்கி யூஸ் பண்றாங்கப்பா!

முகத்தில் போட்டிருக்கும் மேக்கப் கலையாமல், ஷவரில் குளிக்கும் வகையிலான குளியல் கவசம் ஒன்றை உருவாக்கியுள்ளன.

Google Oneindia Tamil News

நியூயார்க்: முகத்தில் போட்டிருக்கும் மேக்கப் களையாமல், ஷவரில் குளிக்கும் வகையிலான குளியல் கவசம் ஒன்று பிரபலமாகி வருகிறது.

நம்ம ஊரில் அடிக்கும் வெளியிலுக்கு ஷவரில் குளிப்பது ஒரு அலாதி சுகம். ஆனால் சென்னையில் உள்ள தண்ணீர் பஞ்சத்தில், ஷவரில் குளிப்பதெல்லாம் எட்டாக்கனியாக மாறி வருகிறது. ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு குடும்பமே குளிக்க வேண்டிய நிலை தான் இங்கு நிலவுகிறது.

ஆனால் ஷவரில் குளிப்பதற்காக ஒரு பாதுகாப்பு கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு நிறுவனம். குளிப்பதற்கு எதற்கு பாதுகாப்பு கவசம் எனும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. அது எதற்கு என்றால் முகத்தில் போட்டிருக்கும் கேக்கப் களையாமல் பார்த்துக்கொள்கிறது இந்த கவசம்.

ஹெல்மெட் மாடல்:

ஹெல்மெட் மாடல்:

நம்ம ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ஹெல்மட் போல் தான் இருக்கிறது இந்த குளியல் கவசம். அதை லைட்டாக பட்டி டிங்கரிங் செய்து இதனை உருவாக்கியிருக்கிறார்கள். பிளாஸ்டிக்கினால் ஆன இந்த கவசத்தின் மேல் பகுதியில் ஒரு வில்க்ரோ டேப் இருக்கிறது. முகத்தில் கவசத்தை அணிந்து, அந்த டேப்பை இறுக்க ஒட்டிவிட்டால் முகல் நனையாமல் குளிக்கமால்.

நல்ல வரவேற்பு:

நல்ல வரவேற்பு:

ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த குளியல் கவசத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பொருளை அறிமுகப்படுத்திய நிறுவனத்தை சிலாகித்து வருகின்றனர் நெட்டிசன்கள். சிலர் எதற்கு இந்த குளியல் கவசம் எனப் புரியாமல் தலையைச் சொரிந்து வருகின்றனர்.

பெரிய சந்தேகம் பாஸ்:

மக்களே நமக்கும் கூட ஒரு சந்தேகம் இருக்கிறது. அது, ‘குளிக்கிறதே உடம்பில் உள்ள அழுக்கு போக வேண்டும் என்பதற்காக தான். பல நாட்கள் குளிக்காமல் இருப்பவர்கள் கூட தினமும் முகம் கழுவுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் முகத்தில் தண்ணீர் படாமல் குளிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

வடிவேலு டயலாக்:

வடிவேலு டயலாக்:

என்ன விஞ்ஞானமோ, விநோதமோ... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா. அதற்கும் மேல் அதனை வாங்கியும் சிலர் பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்களை என்னவென்று சொல்வது. ‘நடுராத்திரி நாங்க ஏண்டா சுடுகாட்டுக்குப் போறோம்' என்ற வடிவேலுவின் டயலாக் மாதிரி, மேக்கப் போட்டுட்டு நாங்க ஏண்டா குளிக்கப் போறோம் என்கிறது நம்ம மைண்ட்வாய்ஸ்.

English summary
A private online company have introduced a shower shield, which is helpfull to take a bath without disturbing your makeup.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X