நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடுநடுங்க வைக்கும் ஒமிக்ரான்.. பிரிட்டனில் மேலும் 90 பேருக்கு பாதிப்பு.. தாய்லாந்திலும் பரவியது

டெல்டாவை விட வேகம் கொண்டது ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலக அளவில் மிரட்டி கொண்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸ், பல்வேறு நாடுகளுக்கு அடுத்தடுத்து பரவி வருகிறது.. இதனால் தீவிர கட்டுப்பாடுகளை நாடுகள் கையில் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பல்வேறு நிலைகளில் உருமாற்றமடைந்து வேகமாக பரவி கொண்டிருக்கிறது.. இப்போது ஒமிக்ரான் என்ற புதிய வகை திரிபாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது.

இது மற்ற வைரஸ்களுடன் ஒப்பிடும்போது படு வேகமாக பரவக்கூடும் என்றும் வீரியமிக்கது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் தேர்தல்: அடடே! ஓரம்கட்டப்பட்ட காங். சீனியர்களையும் தேர்தல் களத்தில் இறக்கிய டெல்லி மேலிடம்! பஞ்சாப் தேர்தல்: அடடே! ஓரம்கட்டப்பட்ட காங். சீனியர்களையும் தேர்தல் களத்தில் இறக்கிய டெல்லி மேலிடம்!

 கலக்கம்

கலக்கம்

இந்த வைரஸ் இந்தியா உள்பட உலகின் 45-க்கும் மேலான நாடுகளில் பரவிவிட்டது.. இதனால் உலக நாடுகள் பீதியில் உள்ளன.. இந்த வைரஸ் பரவலை தடுக்க தீவிரமான முயற்சி மேற்கொண்டு வருகின்றன.. இப்போது ஒமைக்ரான் வைரஸ் தாய்லாந்திலும் பரவியுள்ளது... ஸ்பெயின் நாட்டில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி தாய்லாந்து வந்த 35 வயது நிரம்பிய அமெரிக்கருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தடுப்பூசி

தடுப்பூசி

இதன் மூலம் தாய்லாந்தில் முதன்முறையாக ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது... ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடரில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.. அதேபோல, ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் ஒமிக்ரான் அதிகமாக ஆரம்பித்துவிட்டது.. எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு அந்த நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது... பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவோர், தங்களின் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டுமாம்.. இல்லாவிட்டால் அபராதம் போடப்படுகிறது.. அந்த வகையில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அபராதம் செலுத்தி உள்ளார்.. 400 யூரோ அதாவது இந்திய மதிப்பில் சுமார் 35 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்தி இருக்கிறார்.

பாதிப்புகள்

பாதிப்புகள்

அதேபோல, இங்கிலாந்து நாட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.. அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் பாராளுமன்றத்தில் பேசும்போது, "ஒமிக்ரான் வைரஸ் இங்கிலாந்து முழுவதும் சமூக பரவலாக மாறியுள்ளது... இதில் சர்வதேச பயணத்துடன் தொடர்பில்லாத பாதிப்புகளும் உள்ளது... அதனால், இங்கிலாந்தின் பல பகுதிகளில் தற்போது சமூக பரவல் என்பதை நாம் முடிவு செய்யலாம்" என்று கூறியுள்ளார்.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
     3வது அலை

    3வது அலை

    இந்திய நாட்டை பொறுத்தவரை, வருகிற பிப்ரவரிக்குள் ஒமைக்ரான் தொற்றுடன் 3-வது அலை உச்சத்தை எட்டும் என்று கொரோனா கணிப்பு வியூக நிபுணரும், ஐஐடி விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. இதை பற்றி அவர் சொல்லும்போது, "இந்த புதிய வைரஸ் வருகிற பிப்ரவரிக்குள் 3-வது அலை உச்சத்தை எட்டும்... அப்போது நாட்டில் தினமும் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம்... ஆனால் இது 2-வது அலையை விட மிதமானதாகவே இருக்கும். இப்போதைக்கு புதிய மாறுபாடு அதிக பரவும் தன்மையை கொண்டது தென்பட்டாலும், அதன் தீவிரம் டெல்டா மாறுபாட்டில் காணப்படுவது போல் இல்லை" என்றார்.

    English summary
    OMICRON VIRUS: Another 90 cases of Omicron variant identified in Britain
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X