நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்?

பிரதமர் மோடி 7 நாள் பயணமாக அமெரிக்கா சென்று இருக்கும் அதேவேளையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அமெரிக்கா சென்று இருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: இம்ரான் கான்

    நியூயார்க்: பிரதமர் மோடி 7 நாள் பயணமாக அமெரிக்கா சென்று இருக்கும் அதேவேளையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அமெரிக்கா சென்று இருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறது. உலக அரங்கில் காஷ்மீர் பிரச்சனையை கொண்டு சென்று, பெரிய திருப்பத்தை ஏற்படுத்து பாகிஸ்தான் முயன்று வருகிறது.

    ஐநாவில் அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இது தொடர்பாக பேச உள்ளார். இதற்காக இம்ரான் கான் தற்போது அமெரிக்கா சென்று இருக்கிறார்.

    ஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்ஒரு வாரம் தான் கெடு; வீட்டை காலி செய்யுங்கள்-சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுத்த ஜெகன்

    இம்ரான் கான்

    இம்ரான் கான்

    இம்ரான் கான் முதலில் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றார். சவுதியில் இம்ரான் கான் அந்நாட்டு அரசர் சல்மான் பின் அபுலாசிஸ் அல் சாத் உடன் சந்திப்பு நடத்தினார். இவர்கள் இருவரும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசினார்கள். இந்த சந்திப்பிற்கு பின் இம்ரான் கான் அமெரிக்கா சென்றார்.

    ஆனால் கூடாது

    ஆனால் கூடாது

    ஆனால் இம்ரான் கான் தனியார் விமானத்தில் செல்ல கூடாது என்று சவுதி அரசர் சல்மான் பின் கூறிவிட்டார். இதனால் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் அவர் அமெரிக்கா சென்றார். இதற்காக சவுதி அரசு குடும்பத்திற்கு சொந்தமான விமானம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    என்ன செய்ய போகிறார்

    என்ன செய்ய போகிறார்

    அமெரிக்காவில் இம்ரான் கான் 1 வாரம் இருப்பார். அமெரிக்காவில் இந்த மாதம் 27ம் தேதி நடக்க உள்ள ஐநா ஆலோசனை கூட்டத்தில் இம்ரான் கான் கலந்து கொள்ள இருக்கிறார். இதில் காஷ்மீர் குறித்து அவர் பேசவுள்ளார். அதேபோல் அவரின் 7 நாள் பயணம் முழுக்க காஷ்மீர் பிரச்சனை குறித்து பல்வேறு தரப்புகளில் பேச திட்டமிட்டுள்ளார்.

    என்ன ஒரு விஷயம்

    என்ன ஒரு விஷயம்

    அதேபோல் தற்போது பிரதமர் மோடியும் 7 நாள் பயணமாக அமெரிக்கா சென்று இருக்கிறார். ஹவுடி மோடி விழாவில் அவர் இன்று கலந்து கொள்கிறார். இரண்டு தலைவர்களும் ஒரே நேரத்தில் இப்படி அமெரிக்கா சென்று இருப்பது உலக நாடுகள் இடையே கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

    காஷ்மீர் பிரச்சனை

    காஷ்மீர் பிரச்சனை

    இரண்டு நாட்டு தலைவர்களும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பிரதமர் மோடிக்கு கொடுக்கப்படும் வரவேற்பு அமெரிக்காவில் இம்ரான் கானுக்கு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Pakistan PM Imran Khan reaches USA in Saudi's Salman's special flight on the day of Howdy Modi meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X