நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீர் பிரச்சனை... ஐநாவில் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான்-சீனா.. இனிமேலாவது.. இந்தியா நச் பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர் பிரச்சனை: ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

    நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் எழுப்ப முயன்ற பாகிஸ்தானுக்கு எந்த ஆதரவும் கிடைக்காததால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதை சுட்டிக்காட்டி பாகிஸ்தானை விமர்சித்துள்ள இந்தியா, இனிமேலாவது இந்தியாவுடன் இயல்பான உறவை பேணுவது போன்ற கடினமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்தே பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவும் இந்த பிரச்சனையை ஐநா சபையில் எழுப்பி வருகிறது.

    ஆனால் பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற நான்கு நிரந்த உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதேபால் நிரந்தரம் இல்லாத உறுப்பு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி சீனாவின் மசோதாவை எதிர்க்கின்றன.

    சீனாவின் முயற்சி தோல்வி

    சீனாவின் முயற்சி தோல்வி

    இந்நிலையில் இரண்டு முறை சீனா கொண்டு வந்த ஜம்மு காஷ்மீர் பிரச்சனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் மூன்றாவது முறையாக ஐநா சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து கொண்டு வந்தது. ஆனால் இப்போதும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று மற்ற நாடுகள் எதிர்த்ததால் சீனாவும் பாகிஸ்தானும் தனிமைப்படுத்தப்பட்டன.

    இந்தியா மகிழ்ச்சி

    இந்தியா மகிழ்ச்சி

    ஐ.நா. அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் இது பற்றி கூறுகையில் "ஐ.நா.வின் ஒரு உறுப்பு நாடு (சீனா) மேற்கொண்ட முயற்சியை நாங்கள் மீண்டும் கண்டோம். மற்ற அனைவரின் தெளிவான பார்வையால் தோல்வி அடைந்தது.

    நம்பிக்கையற்றவை

    நம்பிக்கையற்றவை

    பாகிஸ்தான் பிரதிநிதிகள் கொண்டுவந்த எந்த ஒரு குற்றச்சாட்டும் ஐநா சபையில் ஏற்கப்படவில்லை. ஐ.நா. அரங்கில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் பலமுறை கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நம்பிக்கையற்றவை என்று புறந்தள்ளப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இந்த முயற்சி ஒரு கவனச்சிதறலாக கருதப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்தியாவுடனான உறவுகளில் பாகிஸ்தானுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எழுப்பவும் தீர்க்கவும் இருதரப்பு வழிமுறைகள் உள்ளன என்று பல நட்ப நாடுகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இப்போது பாகிஸ்தானுக்கு புரிந்திருக்கும். இனிமேலாவது இந்தியாவுடன் இயல்பான நட்புறவை பேணுவதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்ய வேண்டும்" என்றார்

    English summary
    Pakistan again fails to raise Jammu Kashmir issue in UNSC. New delhi asserting that Islamabad needs to focus on the hard tasks it has to address in order to ensure normal relations with India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X