நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லஷ்கர்-இ- தொய்பா.. ஜெய்ஷ்-இ- முகமது.. தீவிரவாத அமைப்பால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்.. அமெரிக்கா

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுத்தது ஏன்.. பாகிஸ்தானிடம் ஐநா கேள்வி-வீடியோ

    நியூயார்க்: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ- தொய்பா, ஜெய்ஷ்-இ- முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    தீவிரவாதிகளை தேர்தலில் பங்கேற்க பாகிஸ்தான் தொடர்ந்து அனுமதித்து வருவதாகவும் அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் -இ- தொய்பா, ஜெய்ஷ்-இ- முகமது உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலை தந்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் நடந்து வரும் தீவிரவாத சம்பவங்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    மூச்சை திணற வைக்கும் காற்று மாசு.. டெல்லியில் வாகன கட்டுப்பாடு இன்று முதல் அமல்மூச்சை திணற வைக்கும் காற்று மாசு.. டெல்லியில் வாகன கட்டுப்பாடு இன்று முதல் அமல்

    அமெரிக்கா அறிக்கை

    அமெரிக்கா அறிக்கை

    இந்நிலையில் அமெரிக்க உள்துறை அமைச்சகம் கடந்த 2018ம் ஆண்டுக்கான 'தீவிரவாத செயல்பாடுகள்' குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் நாடு தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்வதாக விவரிக்கப்பட்டுள்ளது.

     பாக் தடுக்கவில்லை

    பாக் தடுக்கவில்லை

    பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. தீவிரவாத நிதி தடுப்பு அமைப்பான (எஃப்ஏடிஎஃப்) செயல்திட்டங்களை பாகிஸ்தான் செயல்படுத்தவில்லை. லஷ்கர் -இ- தொய்பா, ஜெய்ஷ்-இ- முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் நிதி சேகரிப்பு மற்றும் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் தடைகளே இல்லாமல் தாராளமாக செயல்படுகின்றன.

    லஷ்கர் -இ- தொய்பா

    லஷ்கர் -இ- தொய்பா

    பாகிஸ்தான் மண்ணில் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றன. மும்பை தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோரை கொலை செய்தது லஷ்கர் -இ- தொய்பா அமைப்பு தான். கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீரின் சஞ்சுவான் ராணுவ முகாமில் ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன.

    தீவிரவாதிகள் போட்டி

    தீவிரவாதிகள் போட்டி

    தங்கள் நாட்டில் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பயிற்சியில் ஈடுபடுவதையும், நிதி திரட்டுவதையும் பாகிஸ்தான் அரசு தடுக்க தவறிவிட்டது. அத்துடன் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடவும் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

    தாலிபன் குழுக்கள்

    தாலிபன் குழுக்கள்

    ஒருபுறம் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் ஆப்கன் தாலிபான்களுக்கும் இடையே நல்லிணக்கத்துக்காக பாகிஸ்தான் குரல் கொடுத்தாலுமை தங்கள் நாட்டில் இயங்கி வரும் ஆப்கானிஸ்தான் தாலிபான் குழுக்கள் மற்றும் ஹக்கானி குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தவறிவிட்டது. இந்த குழுக்களை எதிர்த்து தான் அமெரிக்கா சண்டை போட்டு வருகிறது.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுப்பதாக ஆசிய பசிபிக் கருப்புப் பணத்தடுப்பு குழுவில் பாகிஸ்தான் உறுதி அளித்தது. ஆனால் சொன்னபடி பாகிஸ்தான் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதே உண்மை என அந்த அறிக்கையில் அமெரிக்கா உள்துறை தெரிவித்துள்ளது.

    English summary
    US report on year of 2018 : Pakistan's Lashkar-e-Taiba and the Jaish-e-Mohammed terrorist organization threaten India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X